"'ரோஹித்' பண்ணத மட்டும் பாக்குறீங்களே... அப்போ 'கோலி' பண்ணது எல்லாம் உங்களுக்கு தெரிலையா??..." கம்பீருக்கு ஆகாஷ் சோப்ரா 'பதிலடி'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியிருந்தது.

கடந்த 8 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மா தலைமையில் தான் அந்த அணி அனைத்து கோப்பைகளையும் கைபற்றியுள்ளது. அதே வேளையில், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, ஐபிஎல் தொடரில் கடந்த 8 ஆண்டுகளாக பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இதுவரை ஒருமுறை கூட அந்த அணி கோப்பையை வென்றதில்லை.

இதனால், இந்திய அணியின் சர்வதேச டி 20 போட்டிகளில் கோலியை விட ரோஹித் கேப்டன் பதவிக்கு  பொருத்தமாக இருப்பார் என பல கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும் அதைத் தான் தெரிவித்திருந்தார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கம்பீர், கோலி மோசமான கேப்டன் இல்லை என்றும், ஆனால் சிறப்பான கேப்டன் பற்றி பேச முற்பட்டால் ரோஹித் தான் சிறந்த கேப்டனாக இருப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் வைத்து சர்வதேச அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் போது, ஒரு கேப்டனை ஏன் ஐபிஎல் தொடரில் இருந்து தேர்வு செய்யக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கம்பீரின் கருத்திற்கு பதிலடி தரும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். 'ஐபிஎல் செயல்பாடுகளை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் தான். ஆனால், அதே வேளையில் இந்திய அணிக்காக கோலி செய்துள்ள சிறப்பான பல செயல்பாடுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது' என பதில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்