'கோலியோட சம்பளம்... 'இவர' விட கம்மி தான்'!.. திடீரென விவாதத்தை கிளப்பிய... கிரிக்கெட் வீரர்களின் வருமானம்!.. ரகசியத்தை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சம்பளம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் இலங்கை வீரர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டதையடுத்து வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து போர்க்கொடி உயர்த்திய நிலையில் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் கேப்டன் கோலியின் வருமானம் குறித்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றவர்களை விட அதிகம் சம்பாதிக்கின்றனர் என்ற கருத்தை மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இந்திய வீரர்களுக்குத்தான் அதிக சம்பளம், வருமானம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்திய வீரர்கள் அதிகம் சம்பளம் பெறும் வீரர்கள் அல்ல. தன் நாட்டுக்காக ஆடுவது மூலம் மட்டுமே ஜோ ரூட், விராட் கோலியை விட அதிகம் வருமானம் ஈட்டுகிறார் என்பது தெரியுமா?
இந்தியாவில் கிரேட் ஏ+ ஒப்பந்த வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி. கிரேடு ஏ வீரர்களுக்கு ரூ.5 கோடி. கிரேடு பி-க்கு ரூ.3 கோடி. கிரேடு சி-யிற்கு ரூ. 1 கோடி. டெஸ்ட்டுக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிகளுக்கு ரூ. 3 லட்சம் சம்பளம்.
மேலும், சதம் அடித்தால் ரூ.5 லட்சம், 5 விக்கெட்டுகள் எடுத்தாலும் ரூ.5 லட்சம் கூடுதல் வருமானம். இரட்டைச் சதம் எடுத்தால் ரூ.7 லட்சம். எனவே, டெஸ்ட் கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் ஒப்பந்தம் என்பது 6.7 கோடி ரூபாய். அதாவது நம் ஏ+ ஒப்பந்த வீரர்களுக்கு சமம். White ball சர்வதேச கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு மட்டும் ரூ.3.1 கோடி. இது பெரிய தொகை இல்லை என்றாலும் மோசமான தொகை என்று கூற முடியாது. இரண்டிலும் ஆடுபவர்களுக்கு ரூ.9.8 கோடி கிடைக்கும். எனவே, ஜோ ரூட் ரூ.10 கோடி வருவாய் ஆண்டு ஒன்றுக்கு ஈட்டுகிறார். அதே சமயம், கேப்டனுக்கான ஊக்கத்தொகையாக 25% வழங்கப்படுகிறது. விராட் கோலியின் ஒப்பந்தத் தொகை ரூ.7 கோடி. ஆனால் ஐபிஎல் பணம் என்பது வேறு.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய, இங்கிலாந்து வீரர்களைக் காட்டிலும் குறைந்த வருமானமே ஈட்டுகின்றனர் என்றும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கோலி இல்ல... ரோகித் இல்ல... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்ல... 'இவர்' தான் ரொம்ப முக்கியம்'!.. முன்னாள் வீரர் அசத்தல் கணிப்பு!
- 'ஸ்டூவர்ட் பிராட்-ஐ பாலியல் ரீதியாக விமர்சித்த ஆண்டர்சன்'!.. 'Delete பண்ணா கண்டுபிடிக்க முடியாதா'!?.. தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்!
- ‘மொத்தம் 70 லட்சம் ஓட்டு’!.. மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்த ரசிகர்கள்.. ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- 'ஜடேஜா மீது இவ்வளவு வன்மமா'!?.. கசிந்தது சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் private chat!.. ரசிகர்களை கொந்தளிக்க வைக்கும் screen shots!
- சவுதி vs கோலி!.. 13 ஆண்டுகளாக நீடிக்கும் பனிப்போர்!.. WTC Final-ல் பழி தீர்க்கப்படுமா?.. கோலியின் weakness-ஐ வெளியிட்ட சிறுவயது கோச்!
- ’இலங்கை தொடருக்கு... ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளரா?’ ..’கோலி, ரோகித் இல்லாததால்... புதிய கேப்டனும் வராரு...!’ - எகிறும் எதிர்பார்ப்பு!!
- 'அஷ்வின் இல்லாம... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்ல முடியாது'!.. ஏன் அவர் அவ்வளவு ஸ்பெஷல்?.. தெறி ரெக்கார்ட்ஸ்!!
- 'அதே 4 பேர்... அதே முக்கிய மேட்ச்'!.. 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்... மீண்டும் எப்படி?.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் 'கப்'-ஐ 'எந்த' கூட்டணி அடிக்கும்?
- '2 இந்திய அணியை உருவாக்கியது 'இது'க்காக தான்'!.. பின்னணியில் இவ்வளவு பெரிய வியூகமா?.. பிசிசிஐ பக்கா ப்ளான்!
- 'செம்ம டேலண்ட் அவரு'!.. '100 டெஸ்ட் மேட்ச்ல விளையாடுற தகுதி இருக்கு'!.. இந்திய அணி இளம் வீரரை தினேஷ் கார்த்திக் புகழ்ந்த பின்னணி என்ன?