"ஹர்திக்கோ, தோனியோ.. யார பாத்தும் அந்த பையன் பயப்படுறது இல்ல.." புகழ்ந்த ஆகாஷ் சோப்ரா.. "அவரு தான் இப்போ பெஸ்ட்.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய (26.04.2022) போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "செய்யுற வேலையை லவ் பண்ணுங்க".. தோசை மாஸ்டரின் அசாத்திய திறமை.. பாராட்டிய தொழிலதிபர்..வைரல் வீடியோ..!

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. முன்னதாக, நேற்று நடந்து முடிந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ், புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே, இதுவரை 8 போட்டிகள் விளையாடி, இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் 9 ஆவது இடத்தில் உள்ளது.

மீதமுள்ள  ஆறு போட்டிகளில், அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டும் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் சிஎஸ்கேவுக்கு உருவாகும். இக்கட்டான சூழ்நிலையில், அனைத்து போட்டிகளிலும் அதிக கவனத்துடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

டெத் ஓவர் ஸ்பெஷல் அர்ஷ்தீப்

பஞ்சாப் அணிக்கு எதிராக போட்டியில், சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், அதனை பஞ்சாப் பக்கம் திருப்பியதற்கு முக்கிய பங்கு, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு உண்டு. நடப்பு ஐபிஎல் தொடரில், பஞ்சாப் ஆடியுள்ள அனைத்து போட்டிகளிலும், டெத் ஓவர்களில் மிக குறைவான ரன்களை மட்டுமே அவர் வழங்கி வருகிறார்.

2 ஓவர்களில் 14 ரன்கள்..

அதிலும், சென்னை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், கடைசி இரண்டு ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் களத்தில் இருக்க, 19 ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப், 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் 27 ரன்கள் வேண்டும் என்ற இக்கட்டான நிலை சென்னை அணிக்கு உருவாகி இருந்தது.

இறுதியில், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்த போதும், அசராமல் பந்து வீசிய அர்ஷ்தீப் சிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், சென்னை அணிக்கு எதிராக டெத் ஓவர்களில் 2 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் சிங், 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

யார பாத்தும் பயம் கிடையாது..

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளாருமான ஆகாஷ் சோப்ரா, அர்ஷ்தீப் சிங்கை பாராட்டி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "தோனியின் பேட்டிங் மீது, நாம் கவனம் கொள்வது போல, அர்ஷ்தீப் சிங் பவுலிங் பற்றியும் நாம் பேச வேண்டும். ஹர்திக் பாண்டியா அல்லது தோனி என யார் அங்கே நின்றாலும், அர்ஷ்தீப் சிங் யாரை நினைத்தும் பயப்பட மாட்டார். என்னுடைய கருத்துப்படி, அவர் முற்றிலும் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளராகவும் அர்ஷ்தீப் சிங் உள்ளார். தொடர்ந்து, அடுத்தடுத்த இடங்களில் யார்க்கர் பந்துகளையும் சரியாக வீசுகிறார்" என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, AAKASH CHOPRA, ARSHDEEP, BEST DEATH BOWLER, IPL 2022, RR VS RCB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்