‘இப்டி யாராவது செய்வாங்களா?’... ‘தமிழக வீரர் செய்தது’... ‘எனக்கு ஏமாற்றமா இருந்துச்சு’... ‘முன்னாள் வீரர் விமர்சனம்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், பாதி தொடரில் கேப்டன்சியை விட்டுக் கொடுத்தது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் ஆடியது. இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கேகேஆர் அணியில் துணை கேப்டனாக மட்டுமே ஆடினார். முதல் பாதி முழுவதும் தினேஷ் கார்த்திக் மீது விமர்சனம் எழுந்து வந்தது.
எனினும், முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தினேஷ் கார்த்திக் அப்போது கேப்டன்சியை இயான் மார்கனுக்கு அளித்தார். ஆனால், பலரும் அது தவறான முடிவு எனக் கூறினர். இந்த முடிவு சர்ச்சைக்கு வித்திட்டது.
கொல்கத்தா அணியில் எதுவும் மோசமாக நடக்காத நிலையில், ஏன் பாதி தொடரில் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அது தவறான முடிவு என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று கொல்கத்தா அணி நூலிழையில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.
இது பற்றி தற்போது பேசியுள்ள முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, முதல் ஏழு போட்டியில் நான்கு வெற்றிகள் பெற்ற பின், தினேஷ் கார்த்திக் கேப்டன்சியை விட்டுக் கொடுத்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அடுத்த 7 போட்டிகளில் அதை அவர் அப்படியே செய்து இருந்தால் கொல்கத்தா அணி பிளே-ஆஃப் முன்னேறி இருக்கும். டெ
ல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விட நன்றாக விளையாடியும், தினேஷ் கார்த்திக் கேப்டன்சி இல்லாததால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை’ என்று கூறியுள்ளார். ‘பாதி தொடரில் தினேஷ் கார்த்திக் தானாகவே கேப்டன்சியை விட்டுக் கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவர் அதை உண்மையில் செய்து இருப்பாரா’ எனவும் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார். கொல்கத்தா நிர்வாகம் அவரை கட்டாயப்படுத்தி இதை செய்து இருக்கும் என கூறப்படுவதை ஆகாஷ் சோப்ரா சுட்டிக் காட்டி உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...!!!
- 'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்?!!'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி!!!'... 'ஆமா இவரு யார சொல்றாரு???'...
- "நான் எடுத்த முடிவுதான் கரெக்ட்டு!"... 'இந்த சீசனில் விளையாடாதது குறித்து'... 'சிஎஸ்கே வீரர் சொல்லும் காரணம்!!!'...
- 'நடராஜன் தான் என் ஹீரோ!!!'... 'தமிழக வீரருக்கு'... 'ஜாம்பவான் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டா?!!'... 'அப்போ இனிமே சரவெடிதான்?!!'...
- "நானே அத கொஞ்சமும் எதிர்பாக்கல!!!"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்?!!'...
- கொரோனா வைரஸ் ‘2-வது அலை’.. 11 நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவது நிறுத்தம். அதிரடியாக அறிவித்த நாடு..!
- ‘கின்னஸ் ரெக்கார்டு’.. 3 நாள்ல 208 நாட்டுக்கு பயணம்.. எப்படி சாத்தியம்..? ‘சிம்பிளா’ அவர் சொன்ன ஒரு பதில்..!
- 'எப்படியும் அவருக்கு குட்பை தான்!!!'... 'அதோட CSKல இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியமில்ல?!!'... 'லிஸ்ட் கொடுக்கும் பிரபல வீரர்!'...
- 'ஒரேயொரு Likeஆல் சர்ச்சையை கிளப்பிவிட்டு'... 'அடுத்த நாளே சூர்யகுமார் யாதவ் செய்த காரியம்'... 'வெச்சு செஞ்ச ரசிகர்கள்!!!'...
- 'அடுத்து World Cup வேற வரப்போகுது'... 'பாத்துட்டே இருங்க இது நடக்கும்!'... 'முதல் போட்டிக்கு முன்பே அடித்துச்சொல்லும் பிரபல வீரர்!!!'...