நீங்க வேணா பாருங்க.. அந்த ‘சிஎஸ்கே’ ப்ளேயரை எடுக்க போட்டி போட போறாங்க.. செம டிமாண்ட் இவருக்கு.. ஆகாஷ் சோப்ரா ‘சூப்பர்’ கணிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகவுள்ள வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இன்னும் ஐபிஎல் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள ‘வேறலெவல்’ சம்பவம் பண்ணிய சிஎஸ்கே..!

ஐபிஎல் 2022

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஏற்கனவே உள்ள 8 அணிகள் மற்றும் புதிதாக வந்த 2 அணிகள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

மெகா ஐபிஎல் ஏலம்

இந்த நிலையில் மெகா ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போக உள்ள வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்களும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் இந்திய பந்துவீச்சாளர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கருத்து

இதுகுறித்து பேசிய அவர், ‘இந்திய அணியில் விளையாடும் பல பந்து வீச்சாளர்கள் இந்த தடவை மிகப்பெரிய விலைக்கு ஏலம் போவார்கள். அதிலும் குறிப்பாக தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று தோன்றுகிறது. ஏனெனில் தீபக் சாஹர், புதிய பந்தில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவர். மற்ற இந்திய பந்துவீச்சாளர்களிடம் இல்லாத அளவிற்கு பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் திறமையும் இருக்கிறது’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

சிஎஸ்கே வீரருக்கு செம டிமாண்ட்

தொடர்ந்து பேசிய அவர், ‘தீபக் சாஹரால் முதல் 3 ஓவர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தால் நிச்சயம் அணிக்கும் பலமானதாக அமையும். அதனால் அவரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும். அதேபோல் புதிதாக ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போடும்’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்பு

கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேல், ஷர்துல் தாகூர், புவனேஸ்வர் குமார் போன்ற பல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனாலும் இவர்கள் அனைவரையும் விடவும் தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். தீபக் சாஹர், ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ளார். அதனால் சிஎஸ்கே அணியே மீண்டும் அவரை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 பந்துகளில் 4 விக்கெட்.. ஜேசன் ஹோல்டர் செய்த 'மெர்சல்' சம்பவம்.. ஐபிஎல் ஏலத்தில் நடக்கப் போகும் அதிசயம்??.. பின்னணி என்ன?

AAKASH CHOPRA, INDIAN BOWLER, IPL AUCTION, IPL 2022 MEGA AUCTIONS, ஐபிஎல், ஐபிஎல் ஏலம், ஆகாஷ் சோப்ரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்