ஐபிஎல் மெகா ஏலம்.. சிஎஸ்கே போடும் மாஸ்டர் பிளான்.. ரகசியம் உடைத்த முன்னாள் வீரர்.. என்னப்பா,, விசில் போட ரெடியா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் போட்டித் தொடருக்கான மெகா ஏலத்தில், சிஎஸ்கே அணி யாரை குறி வைக்கும் என்பது பற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென்னாப்பிரிக்க தொடர் முடிந்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி ஆடவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளிலும் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதனிடையே, 15 ஆவது ஐபிஎல் தொடருக்கான வேலைகளும் ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அகமதாபாத் அணி

கடந்த சீசனில் எட்டு அணிகள் பங்கெடுத்திருந்த நிலையில், இந்த முறை 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் 2022 ஆம் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. புதிதாக இணைந்த அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

மற்றொரு புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கே எல் ராகுல், மார்கஸ் ஸ்டியோனிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளது. மற்ற 8 அணிகளும் 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மீதமுள்ள வீரர்களை, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு முன் நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்கவும் உள்ளது.

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றி அசத்தியிருந்த நிலையில், தோனி, ஜடேஜா, கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. வயதான வீரர்களை அதிகம் கொண்ட அணி என சென்னையை பலரும் குறிக்கும் நிலையில், இந்த முறை சென்னை அணி ஏலத்தில் எப்படி பட்ட வீரர்களை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்.. லிஸ்ட்டில் மிஸ் ஆன அஸ்வின் பெயர்.. இன்னொரு 'தமிழக' வீரர் பெயரும் மிஸ்ஸிங்

இவரு தான் டார்கெட்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, சிஎஸ்கே அணி ஏலத்தில் ஒரு வீரரரை குறி வைப்பது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் மீண்டும் பாப் டு பிளஸ்ஸிஸ் ஆடுவார் என நான் நினைக்கிறேன். வீரர்களின் வயதை பற்றி சிஎஸ்கே அணி பெரிதாக கவலை கொண்டதில்லை. அது மட்டுமில்லாமல், சிஎஸ்கே அணியில் ஆடிய டு பிளஸ்ஸிஸ், கெய்க்வாடுடன் இணைந்து பல சிறப்பான பார்ட்னர்ஷிப்களை அமைத்துள்ளார். இதனால், அவரை மீண்டும் அணியில் எடுக்கவே சிஎஸ்கே முயலும்.

பாப் டு பிளஸ்ஸிஸ்

டு பிளஸ்ஸிஸ் இளம் வீரர் கிடையாது. அவர் இன்னும் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடப் போவதுமில்லை. இருந்தாலும், சிஎஸ்கே அணி, மீண்டும் டு பிளஸ்ஸிஸை அணியில் இணைக்க முயற்சிக்கும்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு வேண்டி ஆடி வரும் டு பிளஸ்ஸிஸ், பல போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.

ஆஹா.. வீசுன வலையில தானா வந்து விழுந்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் மீனவருக்கு அடித்த மெகா ஜாக்பாட்!

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அதே போல, கடந்த ஆண்டில், 633 ரன்கள் எடுத்து அசத்திய டு பிளஸ்ஸிஸ், அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். சிஎஸ்கே அணியில் ஆடியதால், அதிக இந்திய ரசிகர்களைக் கொண்டுள்ள டு பிளஸ்ஸிஸ், மீண்டும் சிஎஸ்கே அணிக்காக ஆட நேர்ந்தால், நிச்சயம் சென்னை அணி ரசிகர்கள் அதனைக் கொண்டாட தான் செய்வார்கள்.

AAKASH CHOPRA, REUNITE WITH CSK, ஐபிஎல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்