RCB டீம்ல இவ்ளோ பெரிய மிஸ்டேக் இருக்கே.. இதை யாராவது கவனச்சீங்களா.. தவறை சுட்டிக்கட்டிய ஆகாஷ் சோப்ரா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மிகப்பெரிய தவறு இருப்பதாக ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிஎல் 2022
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். குறிப்பாக ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி சிஎஸ்கே அணியில் விளையாடிய டு பிளசிஸ், ஜேசன் ஹசில்வுட் உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுத்தது. அதேபோல் கொல்கத்தா அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆர்சிபி
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். அதனால் தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள டு பிளசிஸ் அல்லது தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆகாஷ் சோப்ரா
இந்த நிலையில் பெங்களூரு அணியின் ஆடும் லெவனில் தவறு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘தொடக்க வீரர்களாக டு பிளசிஸ், விராட் கோலி உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு மேக்ஸ்வெல் உள்ளார். ஆனால் 4-வது வீரராக அணியில் நம்பிக்கையான பேட்ஸ்மேன் யார் இருக்கிறார்? மீண்டும் மிடில் ஆர்டரில் பிரச்சினையில்தான் ஆர்சிபி சிக்கியிருக்கிறது. 5-வது இடத்திற்கு கூட தினேஷ் கார்த்திக்கை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரின் ஃபார்மே சற்று மோசமாக உள்ளதால் மிடில் ஆர்டர் பலவீனமாகவே இருக்கும்.
மிடில் ஆர்டர்
ஆர்சிபியில் செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இருக்கிறார். அவரை ப்ளேயிங் 11-ல் சேர்க்க முடிந்தால் மிடில் ஆர்டரில் பிரச்சினை இல்லை. ஆனால் அவரை சேர்ப்பது கடினமான ஒன்று. ஏனென்றால் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும். டு பிளசிஸ், மேக்ஸ்வெல், செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் என 3 பேர் பேட்டிங்கிற்கு உதவினால் பவுலிங்கிற்கும் 2 வெளிநாட்டு வீரர்கள் கட்டாயமாக தேவை என்ற சூழலில் ஆர்சிபி இருக்கிறது.
சுழற்பந்து வீச்சு
அதேவேளையில் அணியில் தரமான இந்திய ஸ்பின்னர்கள் இல்லை. கார்ன் ஷர்மா மட்டுமே இருக்கிறார். இவரும் நம்பிக்கை தரும்படி இல்லாததால் இலங்கை சுழ்ற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மீது நம்பிக்கை வைத்து அதிக தொகைக்கு எடுத்துள்ளனர். அதனால் அவரை ப்ளேயிங் 11-ல் ஆட வைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
பந்துவீச்சு சிக்கல்
ஒருவேளை ஹசரங்காவை 4-வது வெளிநாட்டு வீரராக சேர்த்தால், வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்களை பயன்படுத்தியாக வேண்டும். தற்போது ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் உள்ளனர். 3-வது பவுலராக ஆட வைக்க முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் இருக்கிறார். இதனால் ரூதர்ஃபோர்ட்டை களமிறக்கினால், ஜோஸ் ஹசல்வுட் அல்லது ஹசரங்கா இல்லாமல் பந்துவீச்சு பலவீனமாகும். ஒருவேளை ரூதர்ஃபோர்டை உட்காரவைத்தால், மிடில் ஆர்டரில் பேட்டிங் பெரிதும் பாதிக்கப்படும். இப்படி பேட்டிங், சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என சிறந்த இந்திய வீரர்கள் இல்லாததால் ஆர்சிபி பெரும் சிக்கலில் உள்ளது’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
காலேஜ் முடிஞ்சி ஹாஸ்டல் போனபோது இடையில் நடந்த விபரீதம்.. கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த சோகம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ரெய்னா sold to 'CSK'.." ஐபிஎல் ஏலத்தை Recreate செய்த ஹூக்.. "புண்படுத்திட்டே இருக்கீங்களே.." மனம் வருந்திய ரசிகர்கள்
- 2022 IPL: திருமண பிசியில் பிரபல வீரர்.. ஆர்சிபிக்கு எப்போதான் விளையாட வருவாரு.. கேப்டன் பொறுப்பு யாருக்கு?
- "தோனிக்காக கண்டிப்பா அத செய்வேன்.." ரெய்னா எடுத்த முடிவு.. "இதுக்கு எல்லாம் ஒரு மனசு வேணும்யா.." மீண்டும் வருந்திய ரசிகர்கள்
- IPL 2022: சாமியை மறந்த ரசிகர்கள்.. தோனியை சுற்றி வளைத்த கூட்டம்.. அன்பால் நெகிழ்ச்சியடைந்த தோனி!
- சிஎஸ்கே தான் அப்பாவோட ஃபேவரைட்.. இளம் வீரருக்கு சென்னை அணியில் கிடைத்த இடம்.. ஆனாலும் சூழ்ந்து கொண்ட துயரம்
- "என்ன அஸ்வின், சௌக்கியமா??.." ராஜஸ்தான் அணிக்கு வரவேற்ற ஜோஸ் பட்லர்.. நடுவுல ஒன்னு சொன்னாரு பாருங்க.. அதான் ஹைலைட்டே
- "CSK-ல இருந்து கிளம்புறேன்.." ஏலத்திற்கு பிறகு டு பிளஸ்ஸிஸ் வெளியிட்ட 'வீடியோ'.. மனம் உடைந்த ரசிகர்கள்
- ஏகப்பட்ட விமர்சனம்.. ஸ்டைலாக பதில் சொன்ன சிஎஸ்கே.. "தோனியோட பிளானிங்கே புரியலையே"
- விறுவிறுப்பாக நடந்த ஏலம்.. திடீரென சரிந்து விழுந்த ஏலதாரர்.. பதற்றம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்
- ஐபிஎல் அணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அப்போ அந்த ‘நாட்டு’ ப்ளேயர்ஸை எடுக்க போட்டா போட்டி நடக்குமே..!