இந்திய அணி போட்ட திட்டம்.. அந்த பையன் என்னய்யா தப்பு செஞ்சான்?.. உங்க வேலையே இதான்.. கடுப்பான ஆகாஷ் சோப்ரா

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் இளம் வீரர் இடம் பெறாமல் போனது பற்றி, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் மோதவுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்கும், தலா 18 பேர் கொண்ட இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், சமீப காலமாக தொடர்ந்து இந்திய அணியில் ஆடி வந்த சில வீரர்கள் இடம்பெறவில்லை. அது மட்டுமில்லாமல், அதிக இளம் வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இளம் வீரருக்கு வாய்ப்பு

தென்னாப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக பங்கேற்காத ரோஹித் ஷர்மா, அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 என இரண்டு தொடரிலும் அவர் தலைமை தாங்கவுள்ளார். இது தவிர, இளம் வீரர் ரவி பிஷ்னோய், முதல் முறையாக இந்திய அணிக்காக ஆட தேர்வாகியுள்ளார்.

அஸ்வினுக்கு இடமில்லை?

மேலும், குல்தீப் யாதவிற்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னொரு பக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் இந்திய அணியில் தேர்வாகவில்லை. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதலே, முன்னாள் வீரர்கள் பலர், இந்திய அணியின் தேர்வு குறித்து, பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

எங்கு இருக்கிறார்கள்?

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும், இளம் வீரர் ஒருவரை இந்திய அணியில் சேர்க்காதது பற்றி, விமர்சனம் ஒன்றைச் செய்துள்ளார். 'தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பிடித்த அஸ்வினுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் சிகிச்சை காரணமாக, அடுத்த ஒரு மாதத்திற்கு கிரிக்கெட் போட்டிகள் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியானது.


ஆனால், பிசிசிஐ அது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்ரவர்த்தி குறித்தும் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.

ஆச்சரியமாக இருக்கிறது

ஒரு நாள் அணியில் முதல் முறையாக ரவி பிஷ்னோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், ராகுல் சாஹர்  பற்றி யாரும் பேசாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ராகுல் சாஹர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர், கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தனர். ஆனால், தற்போது இரண்டு பேருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த டி 20 தொடரில், காயம் காரணமாக ராகுல் சாஹர் அணியில் இடம் பெறவில்லை என கூறினார்கள்.

ஒதுக்கி விடாதீர்கள்

ஆனால், இந்த முறை அவர் தேர்வு செய்யப்படாமல் போனதற்கு எந்த காரணங்களையும் சொல்லவில்லை. ரவி பிஷ்னோய் என்ற இளம் வீரரை ராகுல் சாஹர் இடத்தில், இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

இனி வரும் காலங்களில், ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கொடுங்கள். மாறாக, ராகுல் சாஹரை ஓரங்கட்டியது போல ஒதுக்கி விடாதீர்கள்' என இந்திய அணியின் தேர்வு பற்றி, கடுமையான விமர்சனத்தினை ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ளார்.

RAVICHANDRAN ASHWIN, AAKASH CHOPRA, IND VS WI, RAHUL CHAHAR, VARUN CHAKRAVARTHY, RAVI BISHNOI, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர், ஆகாஷ் சோப்ரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்