“இதே தான் ரெய்னாவுக்கும் நடந்தது”.. அப்டின்னா அடுத்த வருஷம் ஜடேஜா CSK-ல இருக்க மாட்டாரா..? முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு நடந்ததுதான் ஜடேஜாவுக்கும் நடப்பதாக முன்னாள் வீரர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Instagram-ல் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்ததா CSK? திடீரென வெடித்த புது சர்ச்சை.. CEO கொடுத்த விளக்கம் என்ன..?

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா ஏற்றுக்கொண்டார். இவர் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே ஜடேஜா சொதப்பினார்.

அதனால் மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஒப்படைத்தார். இதனை அடுத்து தோனி தலைமையில் 3 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அடுத்த 3 போட்டிகளிலும் மெகா வெற்றியைப் பெற்றாலும், சிஎஸ்கே அணியால் நேரடியாக பிளே ஆஃப் செல்ல முடியாது. ரன் ரேட் அடிப்படையில் செல்ல சில வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த சூழலில், காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகியுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ஜடேஜா விளையாடவில்லை. இந்த காயத்தோடு அடுத்த போட்டியில் பங்கேற்றால், பெரிய பிரச்சினையாக மாறும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் அவர் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் தளத்தில் ஜடேஜா குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘ஜடேஜா அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது சந்தேகம்தான். சிஎஸ்கே அணியில் வீரர்கள் விலகுவது, காயம் காரணமாக நீக்கப்படுவது போன்ற விஷயங்கள் எப்போதுமே மறைமுகமாக தான் இருக்கும்.

முன்பு இதேபோல், சுரேஷ் ரெய்னா விவகாரத்தில் எழுந்த சர்ச்சைக்கு இன்றுவரை முழுமையான தகவல் கிடைக்கவில்லை. ஜடேஜா விவகாரமும் அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன். ரெய்னாவுக்கும், நிர்வாகத்திற்கும் ஒத்துப்போகவில்லை என தகவல் வந்ததை தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார்.

தற்போது ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும், அணியிலிருந்தும் விலகியுள்ளார்’ என ஆகாஷ் சோப்ரா கூறினார். இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, MS DHONI, CSK, AAKASH CHOPRA, RAVINDRA JADEJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்