என்ன ரங்கா பழசை மறந்துட்டியா.. சீண்டிய ஆஸி.. ஆகாஷ் சோப்ராவின் பங்கமான கமெண்ட்😅..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த கமெண்ட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரசவ வலியால் துடிச்ச கர்ப்பிணி.. பனியால் ஸ்தம்பிச்ச போக்குவரத்து.. தோளில் சுமந்து சென்று இரண்டு உயிர்களையும் காப்பாத்திய ராணுவ வீரர்கள்..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.

Images are subject to © copyright to their respective owners.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பு என்பது இந்தியா அணிக்கு இந்த டெஸ்ட் தொடரில் வெல்வது மூலம் தான் கைக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வியூகம் அமைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவும் இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. முன்னதாக, 2018 - 19 ஆம் ஆண்டிலும், 2020 - 21 ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாறு படைத்திருந்தது.

இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. 2020-21 தொடரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இந்த இன்னிங்சின் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த வீடியோவில் ரசிகர்கள் கமெண்ட் செய்துவந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்த வீடியோ பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அவருடைய கமெண்ட்டில்,"அந்த தொடரின் ஸ்கோர் லைன் என்ன?" என குறிப்பிட்டிருக்கிறார். 2020-21 தொடர் பற்றி குறிப்பிட்டு ஆஸ்திரேலிய அணி வீடியோவை பகிர்ந்திருந்த நிலையில் அந்த தொடரை இந்தியாவே கைப்பற்றியது என பொருள்படும்படி ஆகாஷ் சோப்ரா போட்ட கமென்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | கணவரைப் பற்றி மலாலா செய்த ட்வீட்.. Poll வச்சு கருத்து கேட்ட கணவர்😅.. வைரல் போஸ்ட்..!

CRICKET, AAKASH CHOPRA, AUSTRALIA, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்