'ஐபிஎல்'ல இப்போ நடக்குறத அப்போவே எப்டி கரெக்டா சொன்னாரு??... இன்னொரு ஜோப்ரா ஆர்ச்சரா நீங்க??... ட்விட்டரில் வைரலான 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மும்பை, பெங்களூர், டெல்லி ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்னும் ஒரு லீக் போட்டி மீதமுள்ள நிலையில், அதன் முடிவைப் பொறுத்து கொல்கத்தா அல்லது ஹைதராபாத் அணிகளில் ஒன்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். இதனிடையே ட்விட்டரில் ஒருவர் கடந்த ஜூலை மாதம், தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் நடைபெறும் சில விஷயங்களை முன்னரே கணித்து தெரிவித்துள்ளார்.

அவரது டீவீட்டில், பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் சராசரியாகத் தான் விளையாடுவார் என்றும், சென்னை மற்றும் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி கடைசி இடத்தை பிடிக்கும் என்றும், பெங்களூர் அணி டெல்லி மற்றும் மும்பை அணிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது போக இந்த முறை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை கைப்பற்றும் எனவும் அவர் தனது டீவீட்டில் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் அனைத்தும் கிட்டத்தட்ட சரியாக நடந்துள்ளது. இந்த சீசனில் 400 க்கு மேல் ரன்களை கோலி குவித்தாலும் சில போட்டிகளில் சொதப்பியிருந்தார். அது மட்டுமில்லாமல், இந்த முறை விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரைட்டும் சற்று சுமாராக இருந்தது.

அதே போல முதல் முறையாக சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறவும் செய்தது. இன்னும் ஐபிஎல் இறுதி போட்டி மட்டும் நடைபெறாத நிலையில், ஹைதராபாத் அணி கோப்பையை கைப்பற்றும் என்பது தவிர மற்ற அனைத்தும் சரியாக நிகழ்ந்துள்ளது. எப்படி ஒருவர் சரியாக முன்னரே கணித்தார் என்றும், இன்னொரு ஜோப்ரா ஆர்ச்சரா இவர் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த பதிவு நேற்றைய போட்டி முடிவுக்கு பின்னர் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 



 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்