'கிரிக்கெட் பாக்க வந்த என்ன செலிபிரிட்டி ஆக்கிட்டாங்களே'...நெகிழ்ந்த கிரிக்கெட் ரசிகர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் பார்ப்பதற்காக இந்தியா வந்த ஆப்கான் ரசிகர் ஒருவர், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இஸ்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியானது லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்காக ஷேர் கான் என்ற ஆப்கான் ரசிகர் காபூலில் இருந்து இந்தியா வந்தார். தனியாக வந்த அவர், ஹோட்டல்களுக்கு சென்று தங்குவதற்கு அறை கேட்டார். அப்போது ஓட்டல் நிர்வாகங்கள், அவருக்கு அறை வழங்க மறுத்து விட்டது.

அதற்கு அவர்கள் கூறிய காரணம் அவரது உயரம். ரொம்ப அதிகம் ஒன்றும் இல்லை. வெறும்  8 அடி இரண்டு அங்குலம் தான். இறுதியாக வெறுத்து போன அவர்,  போலீஸ் ஸ்டேஷன் சென்று முறையிட்டார். அவர்கள், அவரை அழைத்துச் சென்று நாகா ஹிண்டோலா பகுதியில் உள்ள, ஓட்டல் ராஜ்தானியில் தங்க வைத்தனர். இதையடுத்து போலீசுக்கு நன்றி தெரிவித்தார் ஷேர் கான்.

இதனிடையே அவரது உயரம் குறித்து அறிந்த பலர் ஷேர் கானை பார்வையிட, ஓட்டலுக்கு ஏராளமானோர் வந்துவிட்டனர். ‘சுமார் 200 பேர், நேற்று அவரை பார்வையிட வந்து விட்டனர். கிரிக்கெட் பார்க்க வந்த தான் தற்போது ஒரு செலிபிரிட்டி போல மாறிவிட்டதாக கூறினார். மேலும் இந்தியர்களின் அன்பில் நெகிழ்ந்து விட்டதாகவும் கூறினார்.

இதற்கிடையே போலீஸ் பாதுகாப்புடன், ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் போட்டி நடந்த ஏகனா ஸ்டேடியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் போட்டியை கண்டு கழித்தார்.

CRICKET, AFGHAN CRICKET FAN, LUCKNOW, 8-FEET TALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்