செஸ் ஒலிம்பியாட் போட்டி.. முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.. ஆரம்பமே அட்டகாசமா இருக்கே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று துவங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரஹ்மானை வீழ்த்தினார் இந்தியாவின் ரோனக் சத்வானி.
44 வது செஸ் ஒலிம்பியாட்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. இன்று மாமல்லபுரத்தில் துவங்கும் இந்த போட்டி ஆகஸ்டு 10 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் நிகழாத சாதனை இது. அதேபோல இந்திய அணி 6 அணிகளாக களமிறங்குகிறது. இந்த அணிகளில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரம்மாண்ட முறையில் நடைபெறும் இந்த போட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்ட முறையில் நடைபெறும் இந்த போட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை துவங்கி வைத்தார்.
முதல் வெற்றி
இந்நிலையில் இன்று பிற்பகல் துவங்கிய செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரோனக் சத்வானி என்னும் இளம் வீரர் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார். இந்திய ஓப்பன் பிரிவு பி அணியில் விளையாடிய ரோனக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரஹ்மானை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ரோனக் 36-வது நகர்த்தலில் வெற்றிபெற்றார். பெண்கள் பிரிவில் ஜப்பான் அணியை வீழ்த்தியுள்ளது ஸ்பெயின்.
முதன் முதலாக
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்த ஆண்டு தான் முதன் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. முன்னதாக பெலாரசில் இந்த வருடத்துக்கான போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா - உக்ரைன் விவகாரம் காரணமாக இறுதியில் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இந்தியாவிலேயே அதிக கிராண்ட்மாஸ்டர்கள் (26) கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்