'18 வயது'... 'தரவரிசையில் 150வது இடம்'... 'டென்னிஸ் பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த எம்மா'... அமெரிக்க ஓபனில் கில்லியாக ஜொலித்த இளம் புயல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அமெரிக்க ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான பட்டத்தை 18 வயது நிரம்பிய எம்மா ராடுகானு வென்று சாதித்துள்ளார்.

'18 வயது'... 'தரவரிசையில் 150வது இடம்'... 'டென்னிஸ் பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த எம்மா'... அமெரிக்க ஓபனில் கில்லியாக ஜொலித்த இளம் புயல்!

நாம் எல்லாம் இறுதிப் போட்டிக்குச் செல்ல மாட்டோம் என்ற  நம்பிக்கையில் விமான பயணச் சீட்டை எல்லாம் முன்பதிவு செய்து வைத்திருந்த எம்மா ரடுகானு தான் இன்று 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன். தன்னை எதிர்த்து விளையாடிய லேலா ஃபர்னாண்டஸை 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி, தொடரைத் தனதாக்கிக் கொண்டார் எம்மா.

18 year-old Emma Raducanu wins US Open title for first Slam crown

கடந்த 44 ஆண்டுகளாக மகளிர் பிரிவில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட் ஸ்லாம் வெல்வார் என்கிற காத்திருப்புக்கு அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் வென்று முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் எம்மா ரடுகானு. கையேடு பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளையும் படைத்துள்ளார் எம்மா. 1977ஆம் ஆண்டு வெர்ஜீனியா வேட் என்பவர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரை வென்றது தான் பிரிட்டனின் கடைசி கிராண்ட் ஸ்லாம் வெற்றி.

அதன் பிறகு 44 ஆண்டுக்கால காத்திருப்புக்குப் பிறகு ஒரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியைப் பிரிட்டன் ருசித்திருக்கிறது. சீனாவைச் சேர்ந்த தாய்க்கும் ரோமேனியவை சேர்ந்த தந்தைக்கும் கனடாவில் பிறந்த எம்மா ரடுகானு, தன் பெற்றோருடன் தனது இரண்டாவது வயதில் பிரிட்டனுக்கு வந்தார். லண்டனில் வளர்ந்த ரடுகானு, பாலே, குதிரையேற்றம், நீச்சல், கூடைப்பந்து, கோகார்ட்டிங் போன்ற எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டு, தென்கிழக்கு லண்டனில் ப்ரோம்லி டென்னிஸ் அகாடமியில் சேர்ந்தார்.

தற்போது தனது விடா முயற்சியால் தனது 18 வயதில் உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்து, மரியா ஷரபோவாவின் சாதனையை முறியடித்துள்ளார் எம்மா. இந்த வெற்றி மூலம், உலக அளவில் மகளிர் வீராங்கனைகள் பட்டியலில் 23ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார். பிரிட்டனின் நம்பர் 1 வீராங்கனையாகியுள்ளார் எம்மா ரடுகானு.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வீராங்கனைகள் மல்லுக்கட்டும் போட்டியில், 150ஆவது மற்றும் 73ஆவது இடத்திலிருந்த வீராங்கனைகள், மகளிர் அமெரிக்க ஓப்பன் தொடரில் மோதியதையே ஆச்சரியத்துடன் பார்த்த டென்னிஸ் உலகம், எம்மா ரடுகானு நேர் செட்களில் வென்றதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்