இந்த தடவ 'ஐபிஎல்' எங்க நடக்க போகுது??.. பிசிசிஐ எடுக்க போகும் முடிவு?. "சம்பவம் 'Loading' ரசிகர்களே"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமார்ச் மாத இறுதியில், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது பற்றிய அசத்தல் தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.
15 ஆவது ஐபிஎல் தொடர் இந்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து, புதிதாக இரண்டு அணிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள், இந்த ஐபிஎல் சீசனில் இணைந்துள்ள நிலையில், தலா 3 வீரர்களை இரு அணிகளும் தேர்வு செய்துள்ளது.
அகமதாபாத் மற்றும் லக்னோ
ராகுலை கேப்டனாக நியமித்துள்ள லக்னோ அணி, மார்கஸ் ஸ்டியோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்களையும் தேர்வு செய்துள்ளது. அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ள நிலையில், ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை தேர்வு செய்துள்ளது.
மெகா ஏலம்
அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளைத் தவிர, ஏற்கனவே ஆடி வரும் எட்டு அணிகளும், 2 முதல் 4 வீரர்களைத் தக்க வைத்துள்ளது. 10 அணிகளும் மீதமுள்ள வீரர்களை, பிப்ரவரி மாதம் நடுவே நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தேர்வு செய்யவுள்ளனர்.
கிட்டத்தட்ட ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் பற்றி மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகம்
கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்தது. அதே போல, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதி, இந்தியாவில் வைத்து நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாதி, கொரோனா தொற்றின் காரணமாக மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
கோரிக்கை
இதனைத் தொடர்ந்து, இந்த முறையும் கொரோனா தொற்று பாதிப்பு, இந்தியாவின் பல இடங்களில் வேகம் எடுத்து, தற்போது குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, தங்களின் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்த, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தது. இதற்கு மத்தியில், ஐபிஎல் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது பற்றி, தற்போது சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
ராகுலை வைத்து இந்திய அணி பெருசா போட்ட பிளான்??.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே கிரிக்கெட் பிரபலம்
மும்பையில் ஐபிஎல்?
மும்பை நகரில் மட்டும் வைத்து, ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வான்கடே, சிசிஐ மற்றும் படத்தில் ஸ்டேடியம் என 3 மைதானங்களை தேர்வு செய்துள்ளது. ஒரு வேளை தேவைப்பட்டால், புனே மைதானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பல நகரங்களில் நடந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தது. ஆனால், இந்த முறை மும்பை நகரில் மட்டும் நடைபெறவுள்ளதால், பயோ பபுள் கடைப்பிடிப்பதும் சற்று எளிதானதாக இருக்கும். அதே வேளையில், விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய தேவையும் இருக்காது.
கை கொடுக்கும்
ஒரே நகரில் நடத்தும் ஆலோசனை நிச்சயம் கை கொடுக்கும் என தெரிவதால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து எதுவும் தகவல் வெளி வராததையடுத்து, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, அது பற்றி உறுதி செய்யலாம் என்றும் தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் மெகா ஏலம்.. சிஎஸ்கே போடும் மாஸ்டர் பிளான்.. ரகசியம் உடைத்த முன்னாள் வீரர்.. என்னப்பா,, விசில் போட ரெடியா?
- எங்க நாட்டுல ஐபிஎல் போட்டியை நடத்துங்க.. செலவு ரொம்ப கம்மிதான்.. சத்தமில்லாமல் பிசிசிஐக்கு அழைப்பு விடுத்த நாடு..?
- ஸ்ரேயாஸ் எல்லாம் வேண்டாம்.. RCB-க்கு அடுத்த கேப்டனா அவரை போடுங்க.. யாருமே யோசிக்காத வீரர் பெயரை சொன்ன ஆகாஷ் சோப்ரா..!
- ‘அப்படி போடு’.. ரசிகர்கள் செலக்ஷன்.. லக்னோ அணிக்கு பெயர் என்ன தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- ஐபிஎல் ஏலத்துல கலந்துக்கல.. திடீர் ‘ஷாக்’ கொடுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம்..?
- RCB அணிக்கு அடுத்த கேப்டன் இவரா..? லிஸ்ட்லயே இல்லாத பெயரா இருக்கே..! கசிந்த தகவல்..!
- இது என்னய்யா புது ட்விஸ்ட்டா இருக்கு..! இந்த வருசம் ஐபிஎல் அந்த நாட்டுலயா நடக்கபோகுது..? பிசிசிஐ-ன் ப்ளான்-B இதுதானா..?
- இனி ‘VIVO’ ஐபிஎல் கிடையாது.. டைட்டில் ஸ்பான்சரை தட்டித் தூக்கிய ‘மிகப்பெரிய’ நிறுவனம்..!
- இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ‘ஏலம்’ போன வீரர் திடீர் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?