‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு’... 'மீண்டும் களத்தில் இறங்கும் ‘தல’ தோனி'... ‘வெளியான தகவல்’... 'கொண்டாட்டத்தில் ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தை துவங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்ட்டாட்டத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் வரும் மார்ச்  29-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அட்டவணையை வெளியிட்டு இருக்கின்றனர். அதன்படி முதல் போட்டி மும்பை - சென்னை அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சென்னை அணியின் கேப்டனான தோனி, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியின் தோல்விக்கு பின்னர், இதுவரை எந்த ஒரு போட்டியிலும்  கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அவர் இனிமேல் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்று கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை, வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தோனி தொடங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 வாரங்களுக்கு பயிற்சி எடுப்பார் என்றும், அதன் பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டு, மீண்டும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் 1 வாரத்திற்கு முன்னர் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 8 மாதங்களுக்குப் பின்னர் தோனி களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்