BGMA Ticket BGM Shortfilm 2019

‘இந்த நாளை அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க’ ‘ஏன்னா யுவராஜ் சிங் பண்ணுன சம்பவம் அப்டி’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த நாளை பிசிசிஐ நினைவு கூர்ந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்ஸ்மேனுமான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஜீன் மாதம் ஓய்வை பெற்றார். கடந்த 2000 -ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான யுவராஜ் சிங் 2003, 2007, 2011 ஆகிய மூன்று உலகக்கோப்பையில் விளையாடியுள்ளார். இதில் 2011 -ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர். அந்த உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை யுவராஜ் சிங் வென்றார்.

இதனை அடுத்து புற்று நோய் சிகிச்சைக்கு பின் அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சற்று தடுமாறினார். இதனால் அணியில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார். கடந்த 2017 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு சரியாக இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப், மும்பை உள்ளிட்ட அணிகளின் சார்பாக விளையாடினார். தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2007 ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். இதில் 16 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த சாதனையை நிகழ்த்தி 12 வருடங்கள் ஆன நிலையில் பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளது.

YUVRAJSINGH, BCCI, SIX, TEAMINDIA, CRICKET, YUVI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்