100-வது டெஸ்ட்: களத்தில் விராட் கோலி சொன்ன செம விஷயம்.. அப்படியே நெகிழ்ந்து போன அனுஷ்கா சர்மா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி: தனது 100-வது டெஸ்ட்டை விளையாடிய விராட் கோலி இது தனக்கு ஒரு விசேஷமான தருணம் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

100-வது டெஸ்ட் போட்டி
இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடினார் என்பதுதான். பொதுவாக இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் என்பதை விட கிரிக்கெட் வெறியர்கள் என்றே கூறி விடலாம்.

50-க்கும் மேல் சராசரி
அந்த வகையில் நீண்ட காலமாக ரசிகர்களை தனது தனித்துவமான பேட்டிங்கால் கட்டி வைத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் சென்ற பிறகு அந்த இடம் காலியாக இருந்த நிலையில் அதனை செவ்வனே நிரப்பி வருகிறார் விராட் கோலி. அனல் பறக்கும் வெயிலையும், புயல் வேக பந்து வீச்சாளர்களை சமாளித்து கொண்டு 50-க்கும் மேல் சராசரி வைத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை.

 

மனைவி அனுஷ்கா சர்மா
100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி பல சதங்களுடன் இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இன்றைய மேட்ச் தொடங்குவதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலியை கவுரப்படுத்தியது. சக வீரர்கள் சூழ்ந்து நிற்க மனைவி அனுஷ்கா சர்மாவுடன் களத்திற்கு வந்தார் விராட் கோலி. இதன் பிறகு பயிற்சியாளர் டிராவிட், 100-வது டெஸ்ட்டை குறிக்கும் வகையில் நினைவு சின்னத்தையும், தொப்பியையும் வழங்கினார்.

நீங்கள் இல்லாமல் சாத்தியமில்லை
இதன் பின்னர் பேசிய பயிற்சியாளர் டிராவிட், விராட் கோலி இந்திய அணிக்கு செய்த பங்களிப்பை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய விராட் கோலி நெகிழ்ச்சியுடன் பேசினார். ''இது எனக்கு ஒரு விசேஷமான தருணம். என் மனைவி இங்கே இருக்கிறார் , என் சகோதரனும் இங்கே இருக்கிறார் . எல்லோரும் மிகவும் பெருமைப்படுகிறார்கள். நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. பிசிசிஐ-க்கும் நன்றி' என்று கூறினார்.

அடுத்த தலைமுறை
தொடர்ந்து பேசிய விராட் கோலி, ''தற்போதைய கிரிக்கெட்டில், நாங்கள் மூன்று வடிவிலான கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுகிறோம். என்னிடமிருந்து  அடுத்த தலைமுறை எடுக்கக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், நான் இந்த 100 போட்டிகளையும் தூய்மையான வடிவத்தில் விளையாடினேன்' என்று தெரிவித்தார்.

VIRATKOHLI, VIRAT KOHLI, 100TH TEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்