ஒரு விஷயம் சொன்னா 'ஷாக்' ஆயிடுவிங்க... எவ்வளவுதான் 'வாக்கிங்' போனாலும்... 'ஆறு' மாத ஆய்வில் வெளியான அதிர்ச்சித் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிர்ஹாம் யங் பல்கலைக்கழக மாணவர்கள் 120 பேரை இந்த ஆய்வில் பங்கேற்க வைத்தனர். அவர்களின் ஸ்டெப்களை கண்காணிக்க 24 மணி நேர ஸ்பீடோமீட்டர் கருவி அவர்களது கைகளில் பொறுத்தப்பட்டது. அவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 11 ஆயிரத்து 66 அடிகள் வரை நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் அவர்கள் நடந்தனர்.
சோதனை நாட்களில் அவர்கள் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் எடை உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டன. 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பவர்கள் உடல் எடை அதிகரிப்பு இதனால் குறைகிறதா? என ஆராய்ந்தனர். முடிவில் சராசரியாக 15 ஆயிரம் அடி வரை நடந்தவர்கள் உடல் எடை கூட குறையவில்லை. மாறாக அவர்களின் உடல் எடை சராசரியாக ஒன்றரை கிலோ அதிகரித்துள்ளது.
ஆய்வு குறித்து அப்பல்கலைகழக பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது என தெரிவித்துள்ளார். நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை என்றும், ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபடுவது போன்ற நன்மைகள் வேண்டுமானால் நடப்பதன் மூலம் கிடைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இரவில் 'ஷார்ட் சர்க்யூட்டால்' வீட்டில் பற்றிய 'தீ'... அசந்து தூங்கிய குழந்தை, மற்றும் 'குடும்பத்தினர்'... விழித்துக் கொண்டிருந்த சிறுவன் 'நோவா'... "என்ன செய்தான் தெரியுமா?..."
- 'போலீஸ்' வாகனத்தை நிறுத்தி 'பதறிய' கணவன்... 'மோசமான' மனைவியின் 'உடல்நிலை'... 'போலீஸ்காரர்' செய்த 'வியப்பூட்டும்' செயல்...
- அடேய் 'கூகுள் மேப்'... அது என்னடா 'ஆத்துக்குள்ள' வழி போட்டுருக்க.... உன்ன 'நம்புனா பரலோகத்துக்கே' வழி காட்டுறியே...
- மீனுக்கு சவப்பெட்டி ... 'அமெரிக்க' மாணவர்கள் 'இறுதி அஞ்சலி'... 'டின்னர்' என்னவோ 'ஃபிஷ் ஃபிரைதான்'... 'மசாலா' கொஞ்சம் தூக்கலா...
- 'கொரோனாவுக்கு' எயிட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்து... என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் 'சீன அரசு'...
- ‘கல்யாணத்துக்கு வரவங்க கட்டாயம் இத கொடுக்கணும்’.. மெசேஜ் அனுப்பிய மணப்பெண்.. மிரண்டுபோன கல்லூரி மாணவி..!
- 'ரோபோவுக்கு' கூட உயிர் கொடுக்க முடியுமா? இதோ 'விஞ்ஞானிகள்' சாதித்து விட்டனர்... 'ஸ்டெம் செல்' தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி...
- பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி... உரிமையாளர் 'அதிர்ச்சி'... 'கதிர்வீச்சு' பாதிப்பில்லை என ஆய்வாளர்கள் விளக்கம்...
- 2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?...
- மீனோட எடை '158 கிலோ'... மலைக்க வைக்கும் 'சைஸ்'... ஒரு ஊரே உக்காந்து சாப்பிடலாம்...