இன்னைக்கு 'TeddyDay'.. பொண்ணுங்களுக்கு கரடி பொம்மை பிடிக்க காரணம் இதுதானாம்.. காதலர்களே இத நோட் பண்ணுங்கப்பா..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்காதலர் தினம் வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ‘டெடி டே’ கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ‘ரோஸ் டே, புரோப்போஸல் டே, சாக்லேட் டே’ என வாரமொரு நாளும் ஒரு ‘டே’ கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று (10.02.2020) ‘டெடி டே’ கொண்டாடப்படுகிறது. இதில் ‘டெடி பியர்’ பெண்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
அப்படி டெடி பியரை பெண்களுக்கு பிடிக்க என்ன காரணமென்றால் முதலில் அதன் தோற்றம், அதன் க்யூட்டான பெரிய காது, மூக்கு, குண்டான தோற்றம் அவர்களை வெகுவாக கவர்கிறது. பெண்களுக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அந்த குழந்தைத் தனத்தை இந்த டெடி பியர் தட்டி எழுப்புகிறது. இதைப் பார்த்தாலே பெண்கள் குழந்தைபோல் துள்ளிக் குதிக்கின்றனர்.
சில சமயங்களில் அவர்களுக்கு ஏதேனும் கவலை இருந்தால் டெடி பியரை கட்டி அணைத்து அழுகின்றனர். அது அவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கிறது. அதனால்தான் தூங்கும்போது கூட டெடி பியரை கட்டு அணைத்து தூங்குகின்றனர். சில சமயங்களில் அவர்களது காதலன் முன்பு வெறுப்பேற்ற வேண்டுமென்றே டெடி பியரை கொஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் அவர்களை கொஞ்சுவது டெடி பியரை இல்லை, உங்களைதானாம்.
மேலும் காதலின் அடையாளமாக ‘டெடி பியர்’ இருக்க அறிவியல் காரணம் உள்ளது என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன்-பார்பரா பீஸ் தம்பதி ‘ஆண்கள் ஏன் கேட்பதில்லை’ என்ற கூறியுள்ளனர். அதில், பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப காலத்தில் முக்கிய பங்கு வகிப்பது ‘புரோஜெஸ்டிரான்’ என்ற ஹார்மோன். இந்த ஹார்மோன் சுரப்பு குழந்தைகளை பார்க்கும்போதெல்லாம் பெண்களுக்கு அதிகரிக்குமாம்.
முக்கியமாக குழந்தைகளின் வடிவம்தான் இந்த சுரப்பு தூண்டப்படுவதற்கு காரணம். குழந்தைகளின் குண்டான, குட்டையான கை, கால்கள், உப்பிய மார்பு, வயிறு மற்றும் பெரிய கண்கள் இவை அனைத்தும் பெண்களுக்கு பிடிக்குமாம். இப்படிப்பட்ட வடிவங்கள் பொம்மையில் இருப்பதை பார்த்தால் கூட பெண்ணின் உடலில் இந்த ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். அதனால்தான் கரடி பொம்மைகளை பார்த்தால் பெண்கள் குஷியாகி விடுகிறார்கள்.
மேலும் புரோஜெஸ்டிரான் ஹார்மோன் சுரக்கும்போது பெண்களுக்கு தங்களது இணையின் மீது காதலையும், ரொமாண்டிக் உணர்வை அதிகரிப்பதால், இந்த கரடி பொம்மைகள் காதலை வளர்க்க கைகொடுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கண்ணாடி' தடுப்புகளிடையே பறிமாறிக் கொண்ட 'அன்பு'... 'கொரோனா' மத்தியில் நெகிழ வைக்கும் 'காதல்' காட்சி...''வைரல் வீடியோ'...
- ‘எவ்ளோ பெரிய முரட்டு சிங்கிளும் இன்னைக்கு ப்ரொபோஸ் பண்லாம்’.. ட்ரெண்ட் ஆகும் #ProposeDay2020!
- VIDEO: 'ஸ்டைலா... கெத்தா... வந்து நின்ன காதல் பரிசு!'... 'விலை எவ்ளோனு தெரிஞ்சா தல சுத்திடும்'... காதலி கொடுத்த ஷாக்!
- ‘திருமணத்திற்கு முன்பே காலையில்’... ‘குழந்தைப் பெற்ற கல்லூரி மாணவி’... ‘மாலையில் காதலரை கரம் பிடித்த சம்பவம்’!
- அவ கேட்டதெல்லாம் ‘இது’ மட்டும்தான்... ‘மணப்பெண்’ கேட்ட ‘100 பரிசுகள்’... தேடியலைந்து வாங்கி ‘அசத்திய’ மாப்பிள்ளை...
- “இதான் அந்த சர்ப்ரைஸா?”... “இப்படி ஒரு கிஃப்டை யார்னாலயும் கொடுக்க முடியாது!”.. “வேறலெவல்” வீடியோ!
- வீட்டை விட்டு வெளியேறிய... இளம் காதல் ஜோடிகள்... எடுத்த விபரீத முடிவு... உறைந்து நின்ற பெற்றோர்!
- மகனுடன் சேர்ந்து தந்தை வெளியிட்ட ‘வைரல்’ வீடியோ... வீட்டுக்கு வெளியே காத்திருந்த வேறலெவல் ‘சர்ப்ரைஸ்’...
- VIDEO: ‘சர்ப்ரைஸ் கிறிஸ்துமஸ் கிஃப்ட்’!.. ‘மகிழ்ச்சியில் ஷாக்கான மகள்’.. ‘கண்கலங்கிய அப்பா’!.. அப்டி என்ன கிஃப்ட் தெரியுமா..?
- VIDEO: ‘சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஸ்டுடண்ட்ஸ்’!.. ‘கண்கலங்கிய டீச்சர்’!.. அப்படி என்ன கொடுத்தாங்க தெரியுமா..?