WorkFromHome-னு சொல்லிட்டு பாதி பேர் ‘இந்த’ வேலையதான் பாத்திருக்காங்க.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்லாக்டவுனில் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை செய்பவர்கள் குறித்து நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) வேலை செய்பவர்கள் குறித்து பகீர் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது உலகம் முழுவதும் வீட்டில் இருந்து அலுவலக பணியை செய்யும் ஊழியர்களில் 51% பேர் வேலைகளுக்கு நடுவே லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 18% பேர் அலுவல லேப்டாப்பிலேயே ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாகவும் கண்டறித்துள்ளனர்.
இதனால் ஊழியர்களுக்கு வேலையில் கவனச் சிதைவு ஏற்பட்டு உற்பத்தி குறைய வாய்ப்புகள் உள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி (Kaspersky) தெரிவித்துள்ளது. மேலும் 31% பேர் அலுவலகத்தை காட்டிலும் வீட்டில் தான் அதிக நேரம் வேலை செய்வதாகவும், 46% பேர் தங்களின் தனிப்பட்ட நேரத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேர அளவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வேலை மற்றும் குடும்பத்தை பிரித்துப் பார்க்க முடியாத நெருக்கடி நிலை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட வேலைக்கும் அலுவலக லேப்டாப்பை பயன்படுத்தும் செயல் அதிகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்ந்தால் அலுவலக கலாச்சாரத்தை பாழ்படுத்திவிடும் என அதன் ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!
- 'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'
- 'கொரோனாவால்'.. 'வேலை இழந்த' 30 லட்சம் 'ஊழியர்கள்'! .. வாரம் ஒருமுறை 'மானிய நிதி வழங்க' முடிவெடுத்த 'நாடு'!
- 'ஊரடங்கு' முடிந்தால் 'மகிழ்ச்சிதான்' ஆனாலும்... '93 சதவீதம்' ஊழியர்களுக்கு இருக்கும் 'பயம்'... ஆய்வு கூறும் 'தகவல்'...
- 'மதியம்' தூங்குவதால் 'இப்படியொரு' நன்மையா?... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்!...
- ‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’!
- 'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன?...
- ‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’!
- கொரோனா எதிரொலி!.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!.. முழு விவரம் உள்ளே
- 'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...