விராட் கோலி- அனுஷ்கா தம்பதியரின் தூண்... 1.20 கோடி சம்பளம் வாங்கும் அந்த 'ஆல்-இன்-ஆல்' அழகுராஜா யார்..?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

விராட் கோலி- அனுஷ்கா தம்பதியர் தங்களது குடும்பத்தின் தூண் ஆக ஒருவரைக் கருதுகிறார்கள் என்றால் அது அவர்களுடைய பாடிகார்டு தான். ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் சம்பளம் ஆகப் பெறும் அந்த பாடிகார்டுக்கு அப்படி என்ன தான் வேலை பார்ப்பார் என யோசிக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

Advertising
>
Advertising

விருஷ்கா தம்பதியரின் நீண்ட கால பாடிகார்டு ஆக இருப்பவர் பிரகாஷ் சிங் என்ற சோனு. விருஷ்கா தம்பதியர் தங்களது 4-ம் ஆண்டு திருமண விழாவை சமீபத்தில் தான் கொண்டாடினர். ஆனால், இந்தத் தம்பதியரின் திருமணத்துக்கு முன்பே விராட் கோலிக்குத் தனியாகவும் அனுஷ்காவுக்குத் தனியாகவும் பாடிகார்டு ஆக இருந்துள்ளார் சோனு.

திருமணத்துக்குப் பின்னர் சோனு குடும்ப பாடிகார்டு ஆக முழு நேரமாகப் பணி அமர்த்தப்பட்டுள்ளார். தற்போது விருஷ்கா தம்பதியருக்கு மட்டுமல்லாது வாமிகா கோலிக்கும் சோனு தான் தற்போது பாதுகாவலர் ஆக இருக்கிறார். விருஷ்கா தம்பதியரின் குழந்தை வாமிகா பிறந்ததில் இருந்து இதுவரையில் ஒரு புகைப்படம் கூட வெளியே வராமல் இருக்கிறது என்றால் அதற்கு சோனுவின் பாதுகாப்பு அரண் தான் காரணமாம்.

அனுஷ்கா உடன் கடந்த 7 ஆண்டுகளாகப் பயணித்து வரும் சோனு, தற்போது விருஷ்கா தம்பதியரின் குடும்ப உறுப்பினர் ஆகவே ஆகிவிட்டாரம். பெரும் டெக் நிறுவனங்களில் பெரிய பதவிகளில் கூட சோனு அளவு சம்பளம் வாங்குபவர்கள் இருக்கமாட்டார்கள். ஆமாம், சோனுவின் ஆண்டு வருமானம் 1.20 கோடி ரூபாய் ஆகும். விருஷ்கா தம்பதியர் வீட்டில் இருந்தாலும் உலகம் சுற்றினாலும் சோனு கூடவே தான் இருப்பாராம்.

அனுஷ்காவின் கர்ப்ப காலத்தில் சோனுதான் அனுஷ்காவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பெரிய தூண் ஆகவே இருந்தாராம். இன்றும் பத்திரிகையாளர்களின் பல புகைப்படங்களில் கோலி- அனுஷ்கா தம்பதியரின் பின்னணியில் சோனு காணப்படுவார்

 

VIRATKOHLI, ANUSHKA SHARMA, VAMIKA KOHLI, வாமிகா கோலி, அனுஷ்கா சர்மா, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்