'ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஃபிட் ஆயிட்டாரு...' வெறும் 46 நாட்களில் '43 கிலோ' வெயிட்லாஸ்...! எப்படி சாத்தியமாச்சு...?
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்ஐபிஎஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரிலே 134 கிலோ எடையிலிருந்த தன் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
பொதுவாகவே பலரிடம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற யோசனை இருக்குமே தவிர, அதற்கான முயற்சிகளை எடுத்தோமா என்று யோசிக்கமாட்டார்கள். எண்ணமும் செயலும் ஒருங்கே அமைந்தால் தான் பலன் கிடைக்கும் என ஐபிஎஸ் அதிகாரி விவேக் ராஜ் சிங் குக்ரிலே தன் எடை இழப்பு கதையையே இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் நம் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார்.
விவேக் ராஜ் சிங் இதுகுறித்து கூறும் போது, 'தேசிய போலீஸ் அகாடமியில் சேரும்போது என்னுடைய உடல் எடை 134 கிலோ. அதன்பின் அகாடமியில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் பெரிய அளவில் உடல் எடைக் குறைந்தது.
46 நாட்கள் கடும் பயிற்சி, தேகப்பயிற்சி, அனைத்து பயிற்சிகளும் எனது எடையை 134 கிலோவிலிருந்து 104 ஆகக் குறைத்தது. இது எனக்கு பெரிய சாதனையாக அமைந்தது.
ஆனால் பணியில் சேர்ந்த பின் எடைக்குறைப்பு குறித்து அவ்வளவாக நான் யோசிக்கவில்லை. பீகாரின் நக்சலைட் பகுதிகளில் பொறுப்பேற்ற போது எனக்கு மீண்டும் உடல் எடை எகிற ஆரம்பித்து 138 கிலோவாக மாறியது.
பீகாரில் இருக்கும் போது நிறைய சாப்பிடுவேன். என்னுடைய உணவை வேஸ்ட் செய்யக்கூடாது என்பத்தாலேயே பசி போனாலும் வயிறு முட்ட சாப்பிடுவேன். கடைசியில் அது தான் என் உடல் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.
அதன்பின் வாக்கிங் போகத் தொடங்கி இப்போது வாக்கிங் என்பது தன் கூடப்பிறந்த பழக்கமாகி விட்டது.
இப்போது இருக்கும் என்னுடைய உடல் எடைக்கு காரணம் வாக்கிங். அதோடு உடல் எடைக் குறையத் தொடங்கியதும் சாப்பாட்டு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தினேன்.
கடந்த சில மாதங்களாக என் உணவை எண்ணி எண்ணி சாப்பிடுகிறேன். இன்று வரை 43 கிலோ எடையை வாக்கிங் மற்றும் சாப்பாட்டு முறை மாற்றத்தின் மூலமே குறைத்துள்ளேன். இதன் மூலம் உடல் ஷேப்பும் நன்றாக ஆகி விட்டது' எனக் கூறியுள்ளார் ஐபிஎஸ் அதிகாரி விவேக் சிங்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘முன்னுதாரணமா இருக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணா எப்படி..!’.. KKR வீரருக்கும் ‘அபராதம்’ விதித்த போலீசார்..!
- 'மச்சி உன் போட்டோவை யாரோ லீக் பண்ணி இருக்காங்க டா'... 'பதறியடித்து இன்ஸ்டாகிராமை பார்த்த இளைஞர்'... நீயா இந்த வேலையை பாத்த, சுக்குநூறான மனசு!
- 'என்னா மனுசங்க சார்'... 'சாப்பிட ஹோட்டல் இல்லாமல் சுத்திட்டு இருந்தேன்'... 'போலீஸ்காரர் செய்த உதவி'... நெட்டிசனின் உருக்கமான பதிவு!
- 'மாமனார், மாமியார் செய்யுற காரியமா இது?'... 'இருங்க என் புருஷன் கிட்ட சொல்றேன்'... அழுது கொண்டே கணவனிடம் சொன்ன மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
- ‘அவசியமில்லாமல் வெளியே வராதீங்க’!.. 100-க்கும் மேற்பட்ட சோதனை சாவடி.. தீவிர கண்காணிப்பில் சென்னையின் முக்கிய பகுதிகள்..!
- ‘இன்னும் 40 அடி தோண்டுனா புதையல் கிடைச்சிடும்’!.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த கும்பல்.. ஒரு வருடமாக யாருக்கும் தெரியாமல் நடந்த ‘பகீர்’ சம்பவம்..!
- VIDEO: 'கையில் குளுக்கோஸ் பாட்டிலோட... சாலையில் செல்வோரை துரத்திய 'கொரோனா' பேஷன்ட்’.. 'அலறியடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்...!!' - திடீரென நடந்த அந்த டிவிஸ்ட்...!!!
- ‘உலகமே கொரோனா தொற்றுக்கு அழிஞ்சிட்டு இருக்கு.. ஆனா இந்த சாதிவெறியர்களின் வன்மம் மட்டும் அடங்குவதாய் இல்லை’!.. கொதித்த பா.ரஞ்சித்..!
- 'நாளையிலிருந்து ஊரடங்குன்னா என்னன்னு தெரியும்'... 'கடுமையான நடவடிக்கைகள்'... சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி!
- VIDEO: ரொம்ப முக்கியமான 'ஒரு வேலை' சார்...! 'அதான் வெளிய வந்தேன்...' அப்படி என்னய்யா பெரிய முக்கியமான வேலை...? 'இதுக்கு மேல முடியாது, எடுத்து காட்டிட வேண்டியது தான்...' அடியாத்தி...! - வைரல் வீடியோ...!