Route பார்ப்பதற்காக 'Google Map'-ஐ திறந்த நபருக்கு... மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!.. எதைக் கண்டுபிடித்தார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ (Google Map Street View) தொழில்நுட்பத்தின் மூலம் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை கணவர் கண்டு பிடித்துள்ளார்.

Route பார்ப்பதற்காக 'Google Map'-ஐ திறந்த நபருக்கு... மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி!.. எதைக் கண்டுபிடித்தார் தெரியுமா?

நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ நுட்பத்தின் மூலம் கணவர் தனது மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதை பார்த்துள்ளார்.

பெருவின் லிமா நகரத்தில் இருவரும் நடைபாதை பெஞ்சில் இருந்துள்ளனர். மனைவியின் முகம் கணவருக்கு தெளிவாக தெரியவில்லை என்றாலும் அவர் அன்று அணிந்திருந்த ஆடை அவரை காட்டிக் கொடுத்துள்ளது.

நடைபாதை பெஞ்சில் மனைவி மடி மீது அவரது காதலர் தலை வைத்து படுத்திருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ளார். அவரும் அதை மறுக்கவில்லை, வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் பரஸ்பர விவகாரத்துக்காக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்