"ஐ.க்யூ லெவல் தான் அறிவுத்திறனை நிர்ணயிக்கிறதா?..." "குழந்தைகளை' ஒப்பிடுவது சரியா?..." எதார்த்தத்தை பகிரும் 'நிகழ்கால' மருத்துவம்...

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

குழந்தைகளின் ஐ.க்யூ லெவல் தான் அவர்களின் அறிவுத்திறனை, கற்கும் திறனை நிர்ணயிக்கிறது என்பன போன்ற கருத்துக்கள் பெற்றோர்களின் தவறான கற்பிதங்கள் என தற்போதைய மருத்துவம் குறிப்பிடுகிறது. அது முழுவதுமாக சரியான மதிப்பீடு அல்ல என்றும், ஐ.க்யூ லெவல் பரிசோதனை என்பது ஒரு தோராயமான மதிப்பீடுதான் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஐ.க்யூ லெவல் குறைவாக இருப்பதை நினைத்து வருத்தப்படுவதைப் பார்த்திருப்போம். அத்தகையோர் தங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதும், அவர்களைப் போல திறனுடன் செயல்படுவதற்கு வற்புறுத்துவதும் தவறு என குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர், ராகவன் தமது கருத்துக்களை  behind wood- உடன் பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியான திறன்கள் உண்டு. அது அந்தந்த பெற்றோர்கள் மட்டுமே உன்னிப்பாக கவனித்து தெரிந்து கொள்ள முடியும், அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அவர்களது தனித்திறனை வளர்ப்பதன் மூலம் கட்டமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். மேலும், ஐ.க்யூ லெவல் என்பது ஒரு தோராயமான மதிப்பீடுதானே தவிர, ஒரு குழந்தையை முழுவதுமாக அதைக் கொண்டு வகைப்படுத்துவது முற்றிலும் தவறானது என டாக்டர் ராகவன் தெரிவிக்கிறார்.

ஒரு மனிதனின் ஐ.க்யூ. லெவலை மதிப்பிடும் திட்ட வரையறைகள் இதுவரை 4 முறை மாறிவிட்டன என்றும், தற்போது 5வது முறையாக புதிய வரையறைகளுடன் வர இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அப்படி இருக்கும் போது ஒரு குழந்தையை இந்த முறையைக் கொண்டு மதிப்பிடுவது முழுவதுமாக சரியாக இருக்காது என்பதே அவரது கருத்தாக உள்ளது.

அறிவுத்திறனை மட்டும் சோதித்து குழந்தைகளை வகைப்படுத்தி வந்த நிலையில் தற்போது, வார்த்தைகள், செயல்திறன், உலகை புரிந்து கொள்ளும் திறன், உணர்வுகள் ரீதியாக அணுகும் முறை என குழந்தைகளின் அனைத்து வெளிப்பாடுகளையும் கவனித்து அவர்களது ஐ.க்யூ லெவலை கணக்கிடும் முறை வந்துள்ளதாக குறிப்பிடும் மருத்துவர், இவை அனைத்தும் சரியான அளவுகோளில் இருக்கும்பட்சத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கும் என்பது தற்போதைய மருத்துவத்தின் கணிப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் நலன் குறித்து மேலும் தெரிந்து கொள்ள :

Dr. K. Raghavan, MD(Paed), MRCPCH, FRCPCH, CCST (UK), FELLOWSHIP NICU Paediatric Neurologist, Developmental & Behavioural Specialist .

Kenmax Integrated Special School, Madurai:

Contact Number: +91-9444444317

Address:

No.17, Mellur, Vinayaga Nagar, KK Nagar

625020 Madurai, India

Website: http://kenmaxschool.com/?page_id=12

I.Q. LEVEL, CHILDREN, PARENTS, DOCTORS, SUGGESTED, EVALUATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்