இருமல், சளியில் இருந்து 'சூப்பர்' நிவாரணம்... 'கற்பூரவள்ளி டீ'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி... செய்முறை உள்ளே!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு மக்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை தேடித்தேடி சாப்பிட ஆரம்பித்து உள்ளனர். அந்த வகையில் இருமல், சளி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் கற்பூரவள்ளி டீ தயாரிக்கும் முறை குறித்து கீழே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

கற்பூரவள்ளி இலைகள் - 5
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
தேன் - தேவைக்கு
தண்ணீர் - 2 கப்

செய்முறை 

கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், கற்பூரவள்ளி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்