‘இவங்கள மட்டும் கம்மியாகத் தாக்கும் கொரோனா வைரஸ்’... ‘ஆறுதல் தரும் ஆய்வு’... ‘இருந்தாலும் எச்சரிக்கும் நிபுணர்கள்’!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை உலக அளவில் 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் சில குறிப்பிட்ட வயதினரை மட்டும் குறைந்த அளவே தாக்குவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சீனாவின் உகான் நகரத்தில் இருந்து அதிவேகமாகப் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பும் இதை கொடிய தொற்று என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், குழந்தைத் தொற்று நோய் இதழ் பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள ஆய்வில் கொரோனா வைரஸ் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளைக் குறைவாகவே தாக்குகிறது என்றும், அதன் அறிகுறி மற்றும் தீவிரமும் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
இதனால் கொரோனா அறிகுறி கொண்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தால் ஒன்று இரண்டு வாரங்களிலேயே குணமாகிவிடுகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில், 10 வயதுக்குள் உள்ள எந்த குழந்தையும் இறந்ததாகத் தெரியவில்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் மிகச் சிறிய அளவிலே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இறப்பும் கொரோனாவால் ஒரு சதவிகிதம் என்னும் அளவிலே இருப்பதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் குழந்தைகளை வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் முதியவர்களையே அதிகமாகத் தாக்கியுள்ளதாகவும், அதிலும் ஏற்கெனவே தீர்க்க முடியாத வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்போரையே அதிகமாகத் தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று வரும், அந்த குழந்தைகளிடமிருந்து, பெற்றோர்கள், பெரியவர்கள் மட்டுமின்றி வீட்டுப் பொருட்களிலும் பரவி மிக அதிக நாள் இந்த வைரஸ் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாவ ஸ்டாப் பண்ண, இந்த 5-ஐயும் பண்ணுங்க’.. வைரல் ஆகும் கூகுளின் எளிய வழிமுறைகள்!
- ‘அஞ்சாநெஞ்சம் கொண்ட கொரோனா!’... ‘இந்த ரெண்டு பேரை பார்த்து பம்புகிறதா?’.. சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் ‘தகவல்!’
- 'கொரோனா வந்து இவங்க செத்தா பரவாயில்ல'... 'அரசாங்கம் எடுத்த முடிவு'?... அதிரவைக்கும் ரிப்போர்ட்!
- 'முகக்கவசம் ஒண்ணும் நமக்கு தேவையில்லங்க' ... 'இன்னும் ஒரு 15 நாள் மட்டும் இத பண்ணா போதும்' ... தமிழகத்தின் தற்போதைய நிலவரம்
- 'இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்ததே இல்ல...' 'காம்பயரிங் பண்ணதும் அவங்கதான்...' கொரோனா வைரஸ் காரணமாக ஆடியன்ஸ் யாரும் இல்லாமல் நடந்த ஸ்மாக் டவுன்...!
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
- ‘கொரோனா’ பாதித்த ‘இளைஞர்’... மால், சினிமா, நிச்சயதார்த்தம் என ‘வெளியே’ சென்றிருந்ததால் ‘பரபரப்பு’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
- தந்தையின் இறுதிச்சடங்கை 'வீடியோ கால்' மூலமாக பார்த்த மகன்!... பூத உடலை ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்!.... கல் நெஞ்சையும் கரையவைக்கும் மகனின் பாசப் போராட்டம்!
- 'வாட்டர் பெல்' அடித்த உடனே மாணவர்களை சோப்பு போட்டு கைக்கழுவ சொல்ல வேண்டும்...! 'நோட்டிஸ் போர்டுல ஃபர்ஸ்ட் எல்லாமே போட்ருக்கணும்...' பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!
- 'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!