'பிரசவ வார்டில் துடித்துக்கொண்டிருந்த மனைவி'..'கண்ணீரை வரவழைத்த கணவரது செயல்'!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்அமெரிக்காவின் ஜார்ஜியாவைச் சேர்ந்த கணவர் கெண்டால் கேர்வர். இவரது மனைவி ஜாஸ்மின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தன் மனைவிக்காக செய்த காரியம் வீடியோவாக வலம் வந்ததோடு, காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
அந்த வீடியோவில், பிரசவத்துக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னதாக ஜாஸ்மின் வலியால் துடித்துக் கொண்டிருந்த வேளையில், தனது கைகளில் நிறைய பதாகைகளுடன் அங்கு வந்த கெண்டால் கேர்வர், மூச்சுவிடு என்று எழுதப்பட்ட பதாகையினை தனது மனைவியின் கண் முன் காட்டுகிறார்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் அத்தனை ஆண்டுகால காதல் வாழ்க்கையில் சந்தித்த இனிமையான தருணங்கள் எல்லாவற்றையும் எழுத்தாகவே ஒவ்வொரு அட்டையாக காண்பிக்கிறார். இறுதியில் ஐ லவ் யூவில் முடிக்கிறார். இத்தகைய வீடியோவை பார்த்ததும் பலர் கண்ணீர் விட்டதாகவே, கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
இணையத்தில் தெறி ஹிட் அடித்த இந்த வீடியோவுக்கு எதிராகவும் சில பெண்கள் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். அதாவது அத்தனை வலியில் நானெல்லாம் இப்படி நீங்கள் எழுதி காட்டுவதை வாசித்துக்கொண்டிருக்க மாட்டேன் என்றும் சில பெண்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ கேர் மிகுந்த கெண்டால் கேர்வரின் மனைவி ஜாஸ்மினுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவர் இறந்துட்டார் .. இருங்க அவர் கிட்டயே கேப்போம்'.. Live-ல் உளறிய நிரூபர்.. வைரலாகும் வீடியோ!
- ‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- 'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ!
- ‘அக்காவின் கணவரால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்’... 'உறைந்துபோய் நின்ற குடும்பம்’!
- ‘கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடன்’.. ‘விரட்டியடித்த சிறுமியின்’.. ‘துணிச்சலுக்கு குவியும் பாராட்டுகள்’..
- ‘போட்டியின் நடுவே நொடியில் தாக்கிய மின்னல்’.. ‘சுருண்டு விழுந்த வீரர்கள்’.. ‘வைரலாகும் அதிர்ச்சி வீடியோ’..
- ‘திருமணத்திற்கு சில நிமிடங்கள் முன்’.. ‘கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பரிதாபம்’.. ‘குழந்தையை போராடிக் காப்பாற்றிய மருத்துவர்கள்’..
- ‘3 சகோதரிகளின் ஆடைகளை களைந்து’.. ‘காவலர்கள் செய்த காரியம்’.. ‘கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..
- ‘காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிக்கு’.. ‘ஊர் கூடி கொடுத்த விசித்திர தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..
- 'பொறியியல் வேலைக்கு போகாம'.. 'விவசாயம் செய்ற கணவர்'.. மனைவி எடுத்த விபரீத முடிவு!