“இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்இந்த மாத தொடக்கத்தில், புனேவை தலைமையிடமாகக் கொண்ட பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் என்எஸ்இ வெளியிட்ட அறிக்கையின்படி, தமது முன்னாள் ஊழியர்கள் மீண்டும் நிறுவனத்தில் சேர விரும்பினால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுபற்றிய அந்த அறிக்கையில், “தொடர்ச்சியான பணியமர்த்தல் மூலம் முன்னாள் ஊழியர்களாக இருக்கும் உங்களை இந்நாள் ஊழியர்களாக மாற்ற விரும்புவதால், உங்களுக்காக 600க்கும் மேற்பட்ட பணியிடங்களையும் பதவிகளையும் உருவாக்கியிருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கும் அவர்களின் தொழில்நுட்பங்களை அளவிடுவதற்கும் அவுட்சோர்சிங் எனும் நிர்வாக முறை முடுக்கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதால், மைண்ட்ட்ரீ , பிர்லாசாஃப்ட் மற்றும் எல்டிஐ உள்ளிட்ட ஐடி சேவை நிறுவனங்கள் தங்கள் பழைய ஊழியர்களின் நெட்வொர்க்கை தூசி தட்டுவதாக தெரிகிறது.
இந்த முன்னாள் ஊழியர்களின் நெட்வொர்க், தங்கள் நிறுவனம் விரும்புவதை சரியாக அறிந்த தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த ஆதாரமாக இருப்பதுடன், நடப்பு சூழலில் நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் மென்பொருள் நிறுவனங்கள் ஆள்சேர்ப்பின் போது தங்கள் நிறுவனத்தின் தனித்துவத்தை முன்னிலைப்படுத்தவும், புதிய பணியாளர்கள் கொரோனா சூழலால் ரிமோட் வொர்க் செய்வதாலும், முன்னாள் ஊழியர்களை திரும்ப அழைக்கும் முடிவை இந்நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
"முன்னாள் ஊழியர்களின் விஷயத்தை பொருத்தவரை, வீட்டில் இருந்து பணிபுரிந்தாலும் கூட உற்பத்தித்திறனுக்கான வேகத்தை நிறுவனம் மிக எளிதாக அடைய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை, ஏனெனில் அவர்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் செயல்முறைகள் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்," என்று பிர்லாசாஃப்டின் தலைமை அதிகாரி அருண் ராவ் கூறியுள்ளார்.
“முந்தைய ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும் போது, நிறுவனத்தின் செயல்பாடுகளை மிக விரைவாக ஒருங்கிணைக்க முடியும்” என்று எல்.டி.ஐயின் தலைமை மனித வள அலுவலர் அஜய் திரிபாதி கூறியுள்ளார்.இதேபோல் முன்னாள் மகளிர் ஊழியர்களையும், ஓய்வுபெற்ற பின்னர் வேலைக்குத் திரும்பும் பிற பெண்களையும் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ‘ரிவைவ் வித் எல்டிஐ’ என்ற திட்டத்தை இந்நிறுவனம் நடத்துவது குறிப்பிடத்தக்கது. “இந்த முடிவால், தொழில்துறை முழுவதிலும் உள்ள பெண் தொழில் வல்லுநர்களிடமிருந்து, எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்றும் திரிபாதி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இறந்து போய்ட்டான்னு வந்து சொன்னாங்க...' 'இப்படி பண்ணாத'ன்னு தலையா அடிச்சுக்கிட்டோமே... - 3-வது மாடில விழுந்த சிறுவன்...!
- 'சென்னையின் பிரதான ஏரியாக்களில்'... 'நாளை (18-08-2020) பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'..
- 'பாழடைஞ்சு கெடந்த வீட்ல கட்டுக்கட்டா பணம் நகை...' 'வீடு இருந்தும் 2 பாட்டிகளுக்கும் ரோட்ல தான் வாழ்க்கை...' - விஷயம் தெரிஞ்சு போலீசார் செய்த காரியம்...!
- 'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்!
- '5 கோடி பேருக்கு வேலை கிடைக்க போகுது...' - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அதிரடி தகவல்...!
- 'டிவிக்கு மேலே இருந்த செல்போன்'... 'செல்போன் ரிங்டோன் கேட்டதும் போனை எடுக்க ஓடிய குழந்தை'... சென்னையில் நடந்த கோர சம்பவம்!
- 'சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு...' ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்...? - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு..."
- 'சென்னையில் நாளை'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'...
- 'உப்பில் ஆரம்பித்த தகராறால்'... 'ஆத்திரம் தலைக்கேறிய கணவர் செய்த நடுங்கச்செய்யும் காரியம்'... 'நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்'...
- 'போதும் பா சாமி!.. இதுக்கு மேல தாங்காது!'.. Bench Employees-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்!.. BPO நிலையும் மோசம்!.. அதிர்ச்சி தகவல்!