'சாதரணமாக வந்த தலைவலி'...'ஸ்கேனை' பார்த்து 'ஷாக்' ஆன மருத்துவர்'...இறைச்சியால் வந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

சாப்பிட்ட இறைச்சியால் உடல் முழுவதும் நாடாப்புழுக்கள் புகுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். சரியான சுகாதரம் இல்லாததால் தினம் தினம் பல்வேறு நோய் தாக்குதலுக்கு பலரும் ஆளாகுகிறார்கள். அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் சீனாவில் நடைபெற்றுள்ளது.சீனாவில் 43 வயதான் ஸூ ஸோங் என்பவர் ஒரு மாதமாக தலைவலி, வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். சாதாரண தலைவலி என நினைத்த அவர், அதற்கான சிகிச்சை எடுத்து கொள்ளாமல்  அஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் வலியின் தீவிரம் அதிகமாகவே மருத்துவரை நாடியுள்ளார். மருத்துருவரும் மாத்திரைகளை கொடுத்து அனுப்பி விடுவார் என நம்பி சென்றவருக்கு, மருத்துவமனையில் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்னர், பின் ஜியாங் ரோங் என்ற தொற்றுநோய் மருத்துவரிடம் ஸோங் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

அவரது உடலின் பல பாகங்கள் நாடாப்புழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது அப்போது தெரிய வந்தது. இதனால் தான் அவருக்கு  அஜீர கோளாறு, மற்றும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகள் இருந்தது தெரியவந்தது. ஸ்கேன் மூலம் சோதனை செய்து பார்த்ததில் மூளை, மார்புப் பகுதி, நுரையீரல் என 700க்கும் மேற்பட்ட நாடாப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த மருத்துவர், “சமைக்காத இறைச்சிகளில் நாடாப்புழுக்களின் முட்டைகள் வாழும். அதனை நாம் நன்றாக சமைக்காம சாப்பிடும் பட்சத்தில், அந்த புழுக்கள் உடலில் ஊடுருவி பல தொற்றுகளைப் பரப்பும். இதன் மூலம் உடலின் உறுப்புகள் பாதிக்கப்படும்'' என மருத்துவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

HOSPITAL, TAPEWORMS, BRAIN, LUNGS, PORK, HEADACHE, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்