“வேணாம்டா சாமி.. நாங்க இப்படியே இருந்துடுறோம்!”.. தென் கொரியாவில் அதிகரிக்கும் முரட்டு சிங்கிள்ஸ்..? இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை திறந்தால் 90ஸ் கிட்ஸ் பலரும் திருமணம் ஆகவில்லை என்று புலம்புவது குறித்த மீம்ஸ்கள் பலவற்றை காண முடியும்.

Advertising
>
Advertising

ஒருபுறம் இளசுகளின் நிலைமை இப்படி இருக்க, இன்னொரு பக்கம் திருமண வரன் பார்க்கும் விளம்பரங்களில் ஆண்களுக்கு பெண்கள் சாய்ஸ் அதிகமா? பெண்களுக்கு அதிகமா? யாருக்கு பார்ட்னரை தேர்வு செய்யும் அதிகாரம் இருக்கிறது? யாருக்கு நிர்ப்பந்தம் இருக்கிறது என்பது குறித்து எல்லாம் விளக்குகிறார்கள் என்பது குறித்த மீம்ஸ்களையும் இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதெல்லாம் நமக்கு எதுக்கு. நாம அப்படிக்கா போவோம் என்று பலரும் கொரியன் சீரிஸ்களை பார்ப்பதுண்டு. அங்கு எல்லாமே மாடர்னாகவும் இளமை ததும்பும் நவீன கலாச்சாரமாகவும் இருக்கும் என்று நம்பிக் கொண்டு அந்த சீரிஸ்களை பார்க்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு புதிய தகவல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆம், பிரபல தென்கொரியாவை சேர்ந்த இளைஞர்கள் பலரும் திருமணமென்றாலே தெறித்து ஓடுவதாக கூறப்படும் ஒரு ஆய்வு தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. அந்த நாட்டின் திருமண விகிதாச்சாரம்தான். தென்கொரியாவில் சிங்கிள்ஸ்களின் எண்ணிக்கை 7.2 மில்லிகளாக இருப்பதாக கூறப்படும் ஆய்வுதான் இத்தகைய ஆச்சரியத்தை கிளப்பியிருக்கிறது.

அதன்படி மொத்தமாக தென்கொரியாவில் 2000 ஆண்டு 15.5 சதவீதமாக இருந்த திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், இந்த நிலை தொடர்ந்தால் சுமார் ஐந்தில் இரண்டு பேர் சிங்கிளாக இருப்பார்கள் என்று தென்கொரியாவின் புள்ளியியல் விவரங்கள் கூறுவதாக ஆய்வு முடிவுகள் குறித்த செய்திகள் வலம் வருகின்றன. தற்போது 72 லட்சம் பேர் தென்கொரியாவில் சிங்கிள்ஸ்களாக இருப்பதால் எதிர்காலத்தில் இந்த நிலை இப்படியான ஒரு கட்டத்தை எட்டும் என்று கணிக்கப்படுகிறது.

தற்போது சுமார் 17.6% பேர் சுமார் 30 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் திருமணமான 12 சதவீத மக்கள் குழந்தைகளை வளர்ப்பதை மிகவும் சிரமமாக கருதுவதாகவும், 25 சதவீத மக்கள் தங்களுக்கு சரியான பார்ட்னரை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்வதாகவும், இன்னும் சிலர் பார்ட்னருக்கான தேவை இருப்பதாக தாம் கருதவில்லை என்று குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

இளம் வயதினராக இருந்து திடீரென குடும்ப பொறுப்பு, நாட்டின் பொருளாதார நிதி நிலைமையை சந்திக்கும் சராசரி குடும்ப தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை சந்திக்க இருக்கும் பயத்தின் காரணமாகவே திருமணத்தை பார்த்து இப்படி இளைஞர்கள் தெறித்து ஓடுகிறார்கள், இப்படியே போனால் நிலைமை என்னாவது என்று இது குறித்து இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SINGLE, LOVE, COMMITTED, MARRIAGE LIFE, YOUTH, 90S KIDS, TRENDING, RAIN, STORM, CYCLONE, SOUTH KOREA, SOUTH KOREA SINGELS, SOUTH KOREA YOUTH MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்