'வேற லெவல்ல பண்றீங்கப்பா'.. 'எப்படித்தான் புதுசா புதுசா யோசிக்கிறீங்களோ!'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்இரவு உணவு உண்ணுவதற்கான வழக்குமுறை என்பது பல நாடுகளில் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. ஆனால் உண்ணும் உணவுக்கான நேரத்தை சரியாகக் கொடுத்தும், அதை அனுபவமாக்கிக் கொண்டாடுவதும்தான் அத்தனை நாட்டு கலாச்சாரங்களிலும் இருக்கும் பொதுத் தன்மை எனலாம்.
ஆனால் அது வழக்கமாக இருப்பதில் இருந்து ஒரு புதிய முயற்சியாக நொய்டாவில் உருவாகியுள்ள உணவகம் ஒன்று பிரபலமாகி வருகிறது. ஃப்ளை டைனிங் என்று சொல்லப்படும் இந்த பறக்கும் உணவகம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 160 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தரத்தில் தொங்கும் இந்த உணவரங்க மேஜையில் 24 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடவும், அதுபோக வெயிட்டர்கள் நிற்பதற்கும் இடம் உண்டு.
அத்தனை தாங்குதிறனும் இந்த டைனிங் டேபிள் அமைப்புக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கிரேன் மூலம் மேலே உயர்த்தப்படும் இந்த ஃப்ளை டைனிங்கில் உணவுண்ணுவதற்கு சில விதிகளும் உள்ளன. அதாவது இந்த ஃப்ளை டைனிங்கில் அமர்ந்து அதிகபட்சமாக 40 நிமிடங்கள் மட்டுமே உணவுண்ண வேண்டும்; கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவுண்டால், டைனிங் டேபிள் 4 அடி உயரத்துக்கு மட்டுமே உயர்த்தப்படுமாம்.
ஒரு முறை துபாய் சென்றபோது அங்கு இதுபோன்றதொரு அமைப்பைப் பார்த்த நிகில் குமார் என்பவர் கொடுத்த யோசனையின் கீழ், ஜெர்மனி தொழில்நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையே நோக்கமாகக் கொண்டு தற்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படத் தொடங்கியுள்ளது இந்த உணவகம். இந்த ஃப்ளை டைனிங் தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எப்படி இருக்கு எங்க ஊரு கலை?'..'கண்ணுல அபிநயம்'.. 'உடல் மொழியில நாட்டியம்'.. 'வெளிநாட்டவர்களை' அசரவைத்த தமிழர்.. வீடியோ!
- 'பயமா? எனக்கா?'.. 'என்னா துணிச்சல்.. சான்ஸே இல்ல'.. 'ஒரு நிமிஷத்துல கொலநடுங்கிடுச்சு'.. வைரலாகும் 'சிங்கப்பெண்' வீடியோ!
- 'ஒரே செகண்ட்தான்'.. 'இல்லனா என்னாயிருக்கும்'.. 'பெண்ணுக்கு நேர்ந்த கதி'.. 'பதற வைக்கும்'.. வீடியோ!
- 'நீ செஞ்சது பெரிய உதவி தாயி'...'கண்ணீர் விட்டு கதறிய பாட்டிம்மா'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!
- 'அவர் இறந்துட்டார் .. இருங்க அவர் கிட்டயே கேப்போம்'.. Live-ல் உளறிய நிரூபர்.. வைரலாகும் வீடியோ!
- 'இதான் அடுத்த ஜிமிக்கி கம்மல்!'.. 'வியக்க வைத்த பாதிரியார்'.. இணையத்தை புரட்டிப் போட்ட வீடியோ!
- 'அழாம இருமா'.. 'அண்ணன் சமைச்சு தர்றேன்'.. கடைசி நொடியில் கலங்க வைத்த 'அண்ணன் - தங்கை பாசம்'.. வீடியோ!
- 'இதயங்களை வென்ற குட்டி யானை'.. 'அதன் க்யூட்டான செயலுக்கு'.. குவியும் பாராட்டுக்கள்.. வீடியோ!
- ‘டிராஃபிக் போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்’.. ‘ஐடி ஊழியருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- 'யாரு சார் நீங்க?'.. எல்லோர் இதயத்தையும் வென்ற 'வேற லெவல்' ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ!