காதலி சொன்ன ஒரே வார்த்தை.. ஒரு வருசத்துல 70 கிலோ குறைத்த வாலிபர்.. சில்லறையை சிதற விட்ட நெட்டிசன்கள்!!
முகப்பு > செய்திகள் > கதைகள்அடிக்கடி இணையதளத்தில் பல விதமான நிஜக் கதைகள் உலா வருவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி உலா வரும் கதைகளில், சிலவற்றை நாம் கேள்விப்படும் போது, நமக்கே ஒரு தெம்பு உருவாகி, நம்மை Motivate செய்யும் வகையிலும் அவை அமைந்திருக்கும்.
அந்த வகையில், புவி என்ற இளைஞர் தொடர்பான கதை ஒன்று, தற்போது இணையத்தில் வெளியாகி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.
பொதுவாக, சற்று குண்டாக இருக்கும் நபர் தொடர்பாக அவரை சுற்றி உள்ளவர்கள் சில நேரம் கேலி செய்யும் செய்திகள் அதிகம் நடைபெறுவது உண்டு. தற்போதைய காலகட்டத்தில், குண்டாக இருப்பது சகஜமான ஒன்றாக இருந்தாலும், அப்படி இருக்கும் ஒரு சிலராவது நிச்சயம் ஏதாவது பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
அப்படி குண்டாக இருந்த ஒரு இளைஞர் தான் புவி (Puvi). கடந்த ஆண்டில், சுமார் 139 கிலோ வரை இந்த புவி, தனக்கு செட் ஆகும் ஒரே ஒரு ஜாக்கெட்டை தான் அணிந்து வந்துள்ளார். ஒரே ஒரு உடையை அடிக்கடி அணிந்து வந்ததன் காரணமாக, நிறைய பேர் அவரை கேலிக்கு உள்ளாக்கினர். அது மட்டுமில்லாமல், அவரது எடையை காரணம் காட்டி, காதலியும் அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
தனது காதலியும், தன்னுடைய உடல் பருமன் காரணமாக தன்னை விட்டுச் சென்றதால், மனமுடைந்து போன புவி, அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். தனது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என முடிவு செய்த புவி, தன்னை பலரும் கேலி செய்யவும், தனது காதலி விட்டு செல்லவும் காரணமாக இருந்த உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதற்காக கடந்த ஓராண்டாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்ட புவி, பலரும் நம்ப முடியாத வகையிலான மாற்றத்தையும் உண்டு பண்ணி, பலரையும் வியக்க வைத்துள்ளார். அதன் படி, கடந்த ஒரு ஆண்டில், சுமார் 70 கிலோ எடையை குறைத்த புவி, கடந்த ஆண்டு இருந்ததை விட சரி பாதி எடையில் தற்போது வலம் வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து பல வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் புவி, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி விட்டதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை காரணம் காட்டி, காதலி விட்டு சென்றதால் அப்படியே ஒதுங்கிக் கொள்ளாமல், மன உறுதியுடன் செயல்பட்டு புவி கொடுத்த Transformation, நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
Also Read | கல்யாணத்துக்காக சேர்த்து வெச்ச ரூ.10 லட்சத்த எடுத்து ஊருக்கு ரோடு போட்ட தமிழ்நாடு ஐடி ஊழியர்.!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆபரேஷன் முடிஞ்சதும் கெடச்ச கண் பார்வை.. "முதல் முறையா காதலன பாத்ததும்".. இளம்பெண் சொன்ன விஷயம்
- கணவர் விஷயத்தில்.. காதலனுடன் சேர்ந்து 'மனைவி' போட்ட திட்டம்.. "அந்த ஒண்ணே ஒண்ணு நடந்ததால எல்லாம் தலகீழ மாறிடுச்சு"
- காதலியை மீட் பண்ண இளைஞர் போட்ட பிளான்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!
- "ராத்திரில சூட்கேசுடன் நின்ன இளம்பெண்".. கரெக்ட்டா வந்த போலீஸ்.. கணவனை பிரிந்து காதலருடன் லிவிங் டுகெதரில் இருந்த பெண் செஞ்ச பயங்கரம்..!
- "5 பேருக்கு ஸ்கெட்ச் போட்டோம்".. காதலிக்காக பழிவாங்கிய இளைஞர்.. இந்தியாவை நடுநடுங்க வச்ச சம்பவம்..!
- கார் ஓட்ட தெரியாத காதலி.. Impress பண்ணணும்ன்னு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. இந்தியாவை அதிர வைத்த சம்பவம்
- "என் பெயரை நெஞ்சுல பச்சை குத்தி.. காதலை நிரூபிச்சு காட்டு".. காதலிக்கு கண்டீஷன் போட்ட காதலன்.. கையில் காப்பு மாட்டிய காவல்துறை..!
- "இன்னும் 48 மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க.." சோகத்தில் ஆழ்ந்த இளைஞர்.. கடைசி நேரத்தில் மனம் உருக வைத்த 'சர்ப்ரைஸ்'!!
- "என் பொண்டாட்டி கடல்ல விழுந்துட்டா".. துடிச்சுப்போன கணவன்..மொத்த படையையும் இறக்கிய போலீஸ்.. 2 நாளுக்கு அப்பறம் ஏற்பட்ட டிவிஸ்ட்..!
- காதலியை Impress பண்ண இளைஞர் செஞ்ச காரியம்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!