இறுதி சடங்கு நிகழ்ச்சியில்.. திடீரென கேட்ட இறந்து போன பெண்ணின் குரல்.. அரண்டு போன குடும்பத்தினர்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஒருவர் இறந்த பின்னர், திரும்பி உயிருடன் வர மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், 87 வயதில் இறந்த மூதாட்டி ஒருவர், தனது இறுதிச் சடங்கின் போது பேசியது தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

இதை படித்த உடனேயே, அது அப்படி இறந்த நபர் பேசலாம் என பலருக்கும் கேள்விகளும், குழப்பங்களும் தோன்றலாம்.

Holocaust பிரச்சாரகராக இருந்த மரினா ஸ்மித் என்ற பெண் ஒருவர், தன்னுடைய 87 வயதில் சமீபத்தில் உயிரிழந்தார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், மரினாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது, அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில், அங்கிருந்த அனைவருக்கும் கடும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்தது. இறந்து போன மரினா ஸ்மித், அங்கிருந்த அனைவரின் முன்னிலையிலும் திரையில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். மேலும், அவர் பேசியதுடன் மட்டுமில்லாமல், அங்கிருந்தவர்கள் கேள்விக்கும் பதிலளித்திருந்தார். இது எப்படி சாத்தியமானது என்பது பலரின் கேள்வியாகவும் இருக்கலாம்.

இதனை AI நுண்ணறிவுடன் 'Hologram' என்னும் செயல்முறை படி சாதித்து காட்டியுள்ளனர். மரினா ஸ்மித்தின் மகனான ஸ்டீபன் ஸ்மித் என்பவர் இதனை செய்து காட்டியுள்ளார். AI நிறுவனம் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி உள்ளார். மரினா இறப்பதற்கு முன்பாகவே அவர் பேசிய விஷயங்களை சேகரித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர், டிஜிட்டல் க்ளோன் மூலம், 20 கேமராக்கள் மற்றும் 3டி டெக்னாலஜி உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, இப்படி மரினா ஸ்மித் இறந்த பிறகு பேசியது போன்ற ஒரு வீடியோவை அவர்கள் உருவாக்கி உள்ளனர். ஏற்கனவே பேசிய விஷயங்களை வைத்து, கேள்விகளை உருவாக்கி அதற்கேற்ப வீடியோ ஒன்றையும் அவர்கள் தயார் செய்தனர். இதன் காரணமாக, அங்கிருந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறந்த பின்னர், மரினா ஸ்மித் பதிலளிக்கும் வகையில் இருந்தது, பலரையும் மெய் சிலிர்க்க வைத்திருந்தது.

இது தொடர்பான வீடியோக்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

WOMAN, HOLOGRAM, AI TECHNOLOGY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்