'அக்காவோட திருமணம் நடக்காதுன்னு நான் அத சொல்லல'.. 'ஆனா ரெட்ட வேஷம் போட முடியல'.. திருநங்கையின் கனவு!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

விருதுநகரில் திவாகரனாக பிறந்த ஷெர்லின், ஒரு கட்டத்தில் தனக்குள் ஷெர்லின் இருப்பதை கண்டுணர்ந்தார். ஆனால் தனது இரண்டு அக்காக்களில் ஒருவருக்கு திருமணம் என்பதால், தன்னை மறைத்துள்ளார். எப்படியோ பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் வலிகளைத் தாங்கிக் கொண்டுள்ளார்.

ஆனால், ஷெர்லினுக்கு அவரது வீட்டில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைக்க எண்ணியுள்ளனர். உண்மை என்னவென்றால், திருநங்கையாக பரிணமிக்கும் ஒருவர் இன்னொரு ஆணைத் தான் திருமணம் செய்துகொள்ள முடியுமே தவிர, பெண்ணை அல்ல என்று ஷெர்லின் கூறுகிறார். 

இதனால் வீட்டைவிட்டு வெளியேறி பரமக்குடி செல்ல எண்ணினார் ஆனால் அங்கு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதால், அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டார். எனினும் வீட்டாரிடம் மகளாகவும், வெளியில் மகனாகவும், தான் வாழவிரும்பவில்லை எனவும், தான் தானாக இருக்க முடிகிற இடத்துக்குச் செல்கிறேன் என்று பெற்றோருக்கு கடிதம் எழுதிவிட்டு கிரேஸ் பானுவிடம் சென்று தஞ்சமடைந்துள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், நான் எங்கு சென்றாலும் கண்ணியத்துடன் கூடிய தொழிலைத்தான் செய்வேன். திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளி என்கிற மனோபாவத்தை மாற்றுவேன் என திட்டவட்டமாக எழுதியிருந்தார். பல்வேறு மொழிகளைக் கற்றுவரும் ஷெர்லினுக்கு தற்போது கண்முன் இருப்பதெல்லாம் இரண்டு கனவுகள்.

ஒன்று ஆடிட்டருக்கான சி.ஏ இண்டர் தேர்வில் வென்று ஷெர்லின் ஜோஸ் சி.ஏ என்கிற பட்டத்தை பெற வேண்டும்; இரண்டாவது, அந்த பட்டத்துடன், பருத்திப்புடவை, காலில் கொலுசு அணிந்துகொண்டு தன்னை தானாக ஏற்க மறுக்கும் ஊருக்கும் உறவினருக்கும் முன்னால் சென்று நிற்க வேண்டும் என்பதுதான்.

TRANSGENDER, LGBTRIGHTS, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்