'பரீட்சை'ல வாங்கிய மார்க் பூஜ்ஜியம்'...'சுந்தர் பிச்சை' கொடுத்த சர்ப்ரைஸ்'...இன்ப அதிர்ச்சியில் மாணவி !

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

மாணவி ஒருவர் தான் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கியதைப் ட்விட்டரில் பதிவிட, அதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆற்றிய எதிர்வினை மாணவியை இன்பஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் பி.எச்.டி செய்து வருபவர் சரபினா நான்ஸ். வானியற்பியல் சூப்பர் நோவாக்களை ஆராய்ச்சி செய்து வரும் நான்ஸ், சமீபத்தில் நடந்த இயற்பியல் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இதையடுத்து தனது ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்ட அந்த மாணவி, “தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறமையை மதிப்பீடு அல்ல என குறிப்பிட்டிருந்தார். மேலும் தனக்கு வராத துறையை மாற்றி தற்போது  ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்''.

இதனிடையே மாணவியின் ட்விட்டை கவனித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அதனை தனது பக்கத்தில் பகிர்ந்து,  சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி இன்ப அதிர்ச்சியில், திக்கு முக்காடி போனார். தற்போது இந்த மாணவியின் பதிவுக்கு 57 ஆயிரம் லைக்குகள், 10 ஆயிரம் ரீட்வீட்கள் என செம வைரலாகி வருகிறது. பலரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

GOOGLE, SUNDAR PICHAI, SARAFINA NANCE, ZERO MARK, EXAM, QUANTUM PHYSICS, GOOGLE CEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்