'ஒரே ஒரு பறவைதான்' .. மொத்த இசை நிகழ்ச்சியும் கேன்சல்.. நெகிழவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஒவ்வொரு உயிரும் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் பங்கு கொள்கிறது. ஒரு உயிரை தொந்தரவு செய்து, அதன் வாழ்க்கைக்குள் இருக்கும் லயத்தைக் கெடுப்பதற்கு மனிதர்கள் உட்பட யாருக்கும் உரிமையில்லை.

அப்படி ஒரு பறவைக்காக ஒரு இசை நிகழ்ச்சியையே கேன்சல் செய்துள்ள சம்பவம் வெளிநாட்டில் நிகழ்ந்துள்ளது. நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள சாண்டிஹூக்-கேட்வே நேஷனல் ரிக்கிரியேஷன் ஏரியா என்கிற பீச் உள்ளது. தீவுப்பகுதியான இங்கு பொதுவாக கோடை நாட்களில் இசை நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்படும்.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இசை நிகழ்ச்சிக்காக கூடும் நிலையில், கோடைக்காலம் முடியும் வரை இந்த இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேன்சல் செய்து நேஷனல் பார்க் சர்விஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. வழக்கமான இந்த பீச் பார்க்கின் ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தைத் தந்தாலும், இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அதன்படி, அட்லான்டிக் கடலில் நியூஜெர்சி கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே காணக்கூடிய மிகவும் அரிதான பைப்பிங் பிளோவர் என்கிற பறவையின பறவை ஒன்று இப்பகுதியில் கூடுகட்டி முட்டையிட்டுள்ளதாம். இந்த காலக்கட்டமானது பைப்பிங் பிளோவர் அடைகாக்கும் பருவம் என்பதால், இவை வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 1,000 மீ தூரத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை உள்ளது.

அருகி வரும் இந்த இனத்தில் தற்போது 3000 பறவைகள் மட்டுமே மிஞ்சியிருப்பதால், இந்த பீச் பகுதியில் உள்ள ஒரே ஒரு பறவை குஞ்சுபொரிப்பதற்கான 2 மாத காலத்திற்கு எவ்வித சத்தமும் எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்கிற நோக்கில் இந்த சான்டிஹூக்  பீச் பார்க் இந்த முடிவை எடுத்துள்ளது.

NEWJERSEY, PIPING PLOVERS

மற்ற செய்திகள்