VIDEO: “லெட் மி டெல் எ ‘குட்’ டீ ஸ்டோரி!”.. இது சாய் கிங்ஸ்-ன் வெற்றி ஸ்டோரி! நேர்காணல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஐ.டி பணியை துறந்துவிட்டு சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகியிருக்கும் சாய் கிங்ஸ் என்கிற டீ நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி மற்றும் இணை நிறுவனர் சாதிக் இருவரும் நமக்களித்த பிரத்தியேக பேட்டியில் தங்களது நிறுவனம் வளர்ந்து வந்த பாதையினை வியப்பும், ஆச்சரியமும் கலந்த உண்மைகளுடன் பகிர்ந்துள்ளனர்.

இதுபற்றி பேசிய சாய் கிங்ஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:

“ஐ.டி பணியில் 12 ஆண்டுகள் இருந்துவிட்டு, உணவு நிறுவனத்தில் பகுதி நேரம் தொழில் முனைவோராக 4 வருடங்கள் தொடர்ந்தோம். பின்னர் சொந்தமாகட ரெஸ்டோரண்ட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சார்ந்த பல தொழில்கள் பற்றி யோசித்தோம். பின்னர் காபி நிறுவனத்தை தொடங்க எண்ணினோம். ஏனென்றால் காபிக்கான சந்தையோ தொழில் நிறுவனங்களோ ஒன்று உயர்தரமாகவும், அதை விட்டால் மிகவும் அடித்தளத்திலும் இருக்கிறது. இதுபற்றி உரையாடிவிட்டு டீ சாப்பிடலாம் என்று போனோம். அந்த கணம்தான் டீ நிறுவனத்தை தொடங்கலாம் என்கிற எண்ணம் வந்தது. 2016ல் கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், மவுண்ட் ரோடு, டி.நகர் உள்ளிட்ட இடங்களில் யாரும் மிஸ் பண்ண முடியாத இடங்களில் கிளைகளை நிறுவினோம்.

ஆனால் இதனை டீக்கடை என்று அடையாளங் கண்டுகொள்ள முடியாமல் மக்கள் இருந்தனர். இதனால் நாங்களே வெளியில் நின்றுகொண்டு டீ குடிப்போம். பின்னர் டீ கிளாஸை மட்டும் புகைப்படம் எடுத்து கடைக்கு வெளியில் நிறுத்தினோம். மக்களுக்கு தெரியத் தொடங்கியது. வரத் தொடங்கினார்கள். பின்னர் வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் மட்டுமே பிரபலமாக இருந்த Disposable Flask (அட்டை வடிவிலான பிளாஸ்க்) ஒரு மணி நேரத்துக்கு அந்த பிளாஸ்க் டீயினை சூடாக வைத்திருக்க உதவும். பின்னர் ஸ்விகி, ஸொமாட்டோ உள்ளிட்டவற்றின் வருகையால் இன்னும் கொஞ்சம் சாய் கிங்ஸ் தலைதூக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 6 மாதம் நேரம் எடுத்துக்கொண்டு 2018-ல் தொடங்கி 6 கிளைகளில் தொடங்கி, 18, 25, 55 கிளைகள் என விரிவுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

20 ரூபாய்க்கு ஒரு ரக டீ கொடுக்கத் தொடங்கி, பின்னர் பிளாக் டீ, லெமன் டீ, பாதாம், ஹாட் சாக்லேட் என வெரைட்டியாக குடிக்க விரும்பும் பலருக்குமானதாக இதை மாற்றினோம். கடையில் ஒரு நாளைக்கு 200 முதல் 250 பேர் தற்போது எங்களின் கிளைகளுக்கு வருகிறார்கள். ஆனால் வர முடியாதவர்களுக்காக டெலிவரி செய்வதற்காக பிளாஸ்க் ஐடியா தோன்றியது. அதுவும் அவ்வளவு பெரிய விலையாக இருக்கக் கூடாது என்பதை யோசித்தோம். அதுவும் பிளாஸ்டிக் பிளாஸ்க் அல்ல என்பதை ஜனங்களுக்கு அறிவுறுத்தினோம். இன்றைக்கு டீக்கடைகளிலேயே வெரைட்டியாக டீ கிடைக்கின்றன. ஹெர்பல் டீ குடிக்க விரும்பும் பெண்களையும் அறிந்தோம். அவர்களுக்குமானதாக அந்த டீயை மெனுவில் சேர்த்தோம்.

ஐடி பார்க், மெட்ரோ, கல்லூரி என எல்லா இடங்களிலும், எல்லா வயதுக்காரர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கம் எங்களிடம் இருந்தது. ஐடி ஊழியர்கள் குறுகிய நேரத்தில், குறுகிய விலையில் தரமான டீ மற்றும் ஸ்னாக்ஸை ஆன்லைனில் ஸ்விகி உள்ளிட்டவற்றின் மூலம் ஆர்டர் செய்து குடிப்பதை தற்போது விரும்புகின்றனர். ஆரம்பத்தில் நாங்களே டெலிவரி செய்திருக்கிறோம். அவ்வளவு பேருக்கு சென்று சேர்த்தது ஸ்விகி போன்ற உணவு டெலிவரி போன்ற ஆப்கள்தான். போட்டிக்காக ஒருவர் செய்தால் நாங்கள் ஒன்று செய்ய வேண்டும் என நினைக்காமல், எங்களின் இலக்கையே நாங்கள் நம்பி பணிபுரிகிறோம். பல ஐடி ஊழியர்கள் மதிய உணவையே கட் செய்துவிட்டு டீ அருந்த நினைக்கின்றனர். அதுவும் தவறு என்பதே உண்மை. அதனால் அதற்கும்  மாற்றாக காலை உணவு முதலான சிற்றுண்டிகளை அளிக்கவும் யோசித்து வருகிறோம்.

தொடக்கத்தில் நாங்கள் 2 பேர்தான் இருந்தோம், இன்று ஒரு பெரிய குழு எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எங்கள் கிளைகளை சென்னையில் மட்டுமே தற்போதைக்கு விரிவுபடுத்தியிருக்கிறோம். ஆனால் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் முழுவதும் முறையே 100 கிளைகளையோ 500 கிளைகளையோ நிறுவுவது பெரிய சவாலாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நாங்களும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம்”!

INTERVIEW, CHAIKINGS, TEA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்