'டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு'... '27 வயதில் இளம் வீரரின் முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

27 வயதே ஆகும் இளம் வீரரான, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தனது 17 வயதில், ஜூலை 2009-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அமீர், சராசரியாக 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், 27 வயதே ஆகும் அமீர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட முழு கவனம் செலுத்த இருப்பதாகவும், அதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில் ‘இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவில்லை. சில காலங்களாக இதைப் பற்றி யோசித்த பின்னரே எடுக்கப்பட்ட முடிவு. ஐசிசி உலகக் கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக இந்த முடிவு எடுத்துள்ளேன். மேலும், நாட்டிற்காக நான் விளையாடியதில் பெருமை கொள்கிறேன். எனக்கு இது நாள் வரை உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், அணி வீரர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

ICC, TESTCHAMPIONSHIP, AMIR, PAKISTAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்