'ரயில்வே பிளாட்ஃபார்ம்க்குள்' ஆட்டோ ஓட்டிச் சென்ற டிரைவருக்கு.. '1 லட்சம் ரூபாய்' அன்பளிப்பு!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

கடந்த வாரம் மும்பை மேற்கு வழித்தடத்தில் உள்ள விரார் ரயில் நிலையத்தில் கர்ப்பிணி மனைவியுடன் ரயிலில் வந்திறங்கிய கணவர், தன் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி காரணமாக, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

அனால் பிளாட்ஃபார்மில் இருந்து மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் செல்ல வேண்டும். என்ன செய்வதென அறியாத அந்த கணவர் ஆட்டோ ஓட்டுநர் சாகர் கம்லாட் கவார் என்கிற 34 வயதான ஆட்டோக்காரரிட உதவி கேட்க, அவரோ ஆபத்துக்கு பாவமில்லை என நடைமேடைவரை ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை பிக்-அப் செய்து உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் சாகரோ விதிகளை மீறி ரயிலின் நடைமேடையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றதற்காக கைதானார். ஆனால் பின்பு பலரும் கொடுத்த அழுத்தத்தினால், சாகர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரின அந்த துணிச்சலான மனிதாபிமான செயலை பாராட்டி, சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே தன் நிர்வாகிகளின் மூலம் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை கொடுத்துள்ளார்.

RAILWAY, AUTO, DRIVER, HUMANITY, PREGNANT WOMAN, MUMBAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்