குட்டிப் பன்றியை துரத்திய சிங்கம்.. பன்றி திரும்பி பார்த்ததும் மனம் மாறி சிங்கம் என்ன செஞ்சுது தெரியுமா..?.. உலகளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு.!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

காட்டு விலங்குகளில் கர்ஜணை கொண்ட மிக முக்கியமான விலங்கு சிங்கம். காட்டு ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்துக்கு அடிபணியாத விலங்குகளே இல்லை என்று சொல்லலாம்.

Advertising
>
Advertising

ஏறக்குறைய கொஞ்சம் வலிமை குறைந்த அனைத்து விலங்குகளும் ஒரு முக்கியமான விலங்குக்கு பயப்படுகிறது என்று சொன்னால் அது அனேகமாக சிங்கமாக இருக்கக்கூடும்.  சிங்கங்களின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று வேட்டையாடுவது. இரை சாதாரணமாக கிடைத்தாலும் அதை வேட்டையாடி தின்பதே சிங்கத்தின் பொழுதுபோக்கு என்று சொல்லும் அளவுக்கு சிங்கத்துக்கும் வேட்டையாடுவதற்கும் அவ்வளவு நெருக்கம்.

மனிதர்களும் கூட அருமை பெருமை மிக்க செயல்களை செய்யும் போது சிங்கம் என்று பெருமைக்காக தங்களைச் சொல்லிக் கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரே விலங்கின் பெயர் சிங்கம் தான். அப்படிப்பட்ட சிங்கத்துக்கு இருக்கும் ஒரு கனிவான மனம் தான் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ மூலம் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.

ஆம், குட்டி இளம் பன்றி ஒன்று சிங்கத்தின் கண்களில் சிக்கி விடுகிறது.  அந்த இளம் பன்றிக் குட்டியை துரத்திக்கொண்டு சிங்கம் ஓடுகிறது. இந்த வீடியோ, பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்கிறது. காரணம் சிங்கம் எப்படியும் அந்த குட்டி பன்றியை வேட்டையாடி விடும் என்று பயந்து தான் இந்த வீடியோவை பலரும் பார்க்கின்றனர். ஆனால் வீடியோவின் முடிவில் ஒரு நெகிழ்ச்சியான தருணம் அனைவருக்கும் காத்திருக்கிறது.

பார்ப்பவர்கள் மட்டுமல்ல, சிங்கத்திடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள தப்பித்து ஓடும் அந்த குட்டி பன்றிக்கும் இதே பயம்தான். எப்படியும் சிங்கம் தன்னைப் பிடித்து விடும் என்கிற பயத்துடன், கடைசி நிமிடம் வரை போராடி ஓடும் அந்த குட்டிப் பன்றி, ஒருகட்டத்தில் என்ன நினைத்து என்றே தெரியவில்லை.. தடாலென நின்று திரும்பி சிங்கத்தை பார்க்கிறது.  இந்த தருணம் தான் இணையதளத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், பார்க்கும் அனைவரையும் நெகழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதன்பிறகு நடந்தது இன்னும் நெகிழ்ச்சியானது. ஆம், அந்த குட்டி பன்றி திரும்பி பார்த்ததும் சிங்கம் திடீரென்று மனம் மாறி, அந்த குட்டி பன்றியை வேட்டையாடுவதற்கு பதிலாக குட்டி பன்றியை நெருங்கி சென்று, அரவணைத்து அன்பு செலுத்தி விட்டு செல்கிறது. குட்டி பன்றியும் அங்கேயே நிற்கிறது. யார் எப்போது எடுத்தார்கள் என தெரியாத இந்த காட்சி, வீடியோவாக இணையதளங்களில் சக்கை போடு போட்டு வருகிறது.

LION, FUNNY VIDEO, HEARTMELTING VIDEO, TRENDING, HEART MELTING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்