'எனக்காக ரத்தம் சிந்தினாங்க'.. விவாகரத்தான தாயின் கனவுச் சிறகுகளுக்காக மகன் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

பாலியல் சுதந்திரம் அல்லது திருமண பந்த சுதந்திரம் சமூகத்தின் பொதுவெளியில் ஆண்களுக்கொரு விதமாகவும், பெண்களுக்கு ஒரு விதமாகவும் பல காலம் இருந்து வந்தது.

ஆனால் தற்போது பெண்கள் சுயமாக தத்தம் முடிவுகளை எடுப்பதுண்டு. ஆனாலும் டீனேஜ் மகனையோ, மகளையோ வைத்துக்கொண்டு விவாகரத்தான ஒரு தாய் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்தால், மகளையோ மகனையோ அந்த முடிவு பாதிக்குமா? என்கிற பல கேள்விகள் ஒரு தாய்க்கு இயல்பாகவே எழும்.

அவ்வகையில் கணவரிடம் இருந்து விவாகரத்தான தனது தாயின் இரண்டாவது திருமணத்தை நடத்தி, அதற்கு வாழ்த்துச் சொல்லி கேரளாவில் உள்ள பள்ளிமோன் பகுதியைச் சேர்ந்த இளைஞரான கோகுல் ஸ்ரீதர்,  முதல் திருமணம் சரியாக அமைந்திராத தனது தாய் இரண்டாவது திருமணம் செய்வதற்காக எடுத்த முடிவை தான் வரவேற்பதாக, தனது பேஸ்புக்கில் பாசிட்டிவாக பதிவு செய்துள்ள இடுகை பலரிடையே கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, கேரளாவின் கம்யூனிஸ்ட் மாணவர்கள் அமைப்பில் இருக்கும் கோகுல் 10-ஆம் வகுப்பு படிக்கும்போதே, அவரது தாய், கோகுலின் தந்தையை விட்டு பிரிந்து கோகுலுடன் தனியாக வந்து வளர்க்கத் தொடங்கினார். ஆனால் அப்போதே தன் அம்மாவுக்கு இரண்டாவது திருமணத்தை நடத்தி வைத்து, தனக்காக ஒதுக்கி வைத்திருந்த தன் அம்மாவின் கனவுகளுக்கான மதகினைத் திறந்துவிட எண்ணியிருக்கிறார்.

ஒருமுறை தன் அம்மா தனக்காக உண்மையில் நெற்றியில் ரத்தம் சொட்ட நின்றதாகவும், அப்போது ‘இதெல்லாம் உனக்காகத்தான்பா’ என்று தன் அம்மா கூறியதாகவும் நெகிழும் கோகுல், தன் அம்மாவுடன் படித்த ஒருவரையே தனது அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதை யாரும் வெறுப்புடன் பார்த்தாலும் கூட யாரும் அதை கவனிக்கப் போவதில்லை என்றும்  கூறும் கோகுலின் அம்மா கோகுலுக்காக தான் பணிபுரிந்த டீச்சர் பணியையும் துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SON, MODERN, MOTHER, KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்