'ஆனாலும் எங்களுக்கு நீங்க பெரிய இன்ஸ்பிரேஷன்'.. 'அதனால'.. 'நாசாவின் புதிய அறிவிப்பு!' .. வைரல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > கதைகள்சந்திரயான் 2 மிஷனில் இஸ்ரோவின் கடுமையான முயற்சி தங்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவே இருந்ததாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமது ட்விட்டரில், கூறியுள்ள நாசா, ‘விண்வெளி ஆய்வு என்பது எப்போதுமே கடுமையான ஒன்று. நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப் பட்ட சந்திரயான் - 2 மிஷனுக்காக இஸ்ரோ மேற்கொண்ட தீவிர முயற்சி எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சூரியனைப் பற்றி ஆய்வினைச் செய்வதற்கான திட்டங்களில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
மேலும், விக்ரம் லேண்டர் கருவி நிலவின் தென் துருவத்துக்கு சில கிலோ மீட்டர் அருகில் வரை நெருங்கியதை சுட்டிக் காட்டி ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவை பாராட்டியுள்ளதும், இஸ்ரோவுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐக்கிய அரபு அமீரக விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாஸ் கிரிக்கெட்ட ஒழுங்கா ஆடுங்க'...'அப்புறமா சந்திரயான் பத்தி பேசலாம்'...ஓட விட்ட நெட்டிசன்கள்!
- 'பீனிக்ஸ் பறவையா திரும்பி வருவீங்க'...'கதறி அழுத சிவன்'...'கட்டி அணைத்த மோடி'...உணர்ச்சி பொங்கும் வீடியோ!
- ‘இப்டிதான் நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்’.. பிரமிக்க வைத்த இஸ்ரோ வெளியிட்ட வீடியோ..!
- 'வாத்தியாரே பர்ஸ்ட் கிரைம்'... 'விண்வெளியில் தன்பாலின வீராங்கனை செய்த முதல் குற்றம்'... நாசா விசாரணை!
- ‘பாக்கதானே போறீங்க.. இந்த சந்திரயானோட .. சிறப்பான .. தரமான பல வேலைகளை!’.. இத படிங்க!
- ‘நிலாவுல தண்ணி கெடச்சா யாருக்கு முதல்ல சொல்லணும்னு உங்களுக்கு தெரியும்’ சென்னை மெட்ரோ வைரல் ட்வீட்..!
- ‘இந்தியாவின் கனவு திட்டம்’.. வெற்றிகரமாக விண்ணைப் பிளந்து சென்ற சந்திராயன்-2..!
- மிஷன் சக்தி திட்டம்; நாசாவின் குற்றச்சாட்டிற்கு இஸ்ரோ பதிலடி!
- என்னது விண்வெளியில் குப்பையா? மிஷன் சக்தி திட்டத்தால் நாசா வருத்தம்!
- ‘60 நாள் சும்மாவே படுத்திருந்தா, 13 லட்சம் சம்பளம்’.. இப்டி ஒரு வேலையா?.. ஆச்சரியப்பட வைத்த நிறுவனம்!