கொரோனாவுக்கு மத்தியிலும்... யூ-டியூபில் 'சம்பாதித்து' ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய இளைஞர்... 1 மாச 'வருமானம்' எவ்ளோ தெரியுமா?

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

உலகம் முழுவதும் கொரோனா கோரப்பிடியில் சிக்கித்தவிக்க இதற்கு மத்தியிலும் சாதனையாளர்கள் உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்தியா வில் இருந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி என்பவர் யூ டியூபில் சம்பாதித்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பம் தொடர்பான விமர்சனங்களை வெளியிடும் கவுரவ் புதிய மொபைல்கள் வந்த அன்றே அதற்கான விமர்சனங்களை வெளியிட்டு விடுகிறார். 35 லட்சம் சந்தாதாரர்கள் இவரது யூ-டியூப் சேனலுக்கு உள்ளனர். இதன் வழியாக மாசம் 20 லட்சம் ரூபாய் கவுரவ் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உண்மையில் உற்சாகம் அளிக்கக்கூடிய ஒரு பூஸ்ட்டாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்