'இஸ்லாம் டிரைவருக்காக' இந்து மேலதிகாரி செய்த மனதை நெகிழவைக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

மேலதிகாரி ஒருவர் தனது இஸ்லாமிய டிரைவர் நோண்பு இருக்க முடியாத சூழலில் இருந்ததால், டிரைவருக்கு பதிலாக, தான் நோண்பு இருக்க ஒப்புக்கொண்டு நோண்புருந்துவரும் நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் உருக வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநில்ம் புல்தானா மாவட்டத்தின் வட்டார வன அலுவலராக பணியாற்றி வரும் சஞ்சய் என்.மாலியிடம் டிரைவராக இருந்து வருபவர், ஜஃபார். இஸ்லாமியாரான ஜஃபார் அனைவரும் ரம்ஜான் நோண்பு இருக்கத் தொடங்கும் நாளன்றும் இயல்பாக, தான் செய்யும் டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார்.

அவரை அவரது மேலதிகாரியான வன அலுவலர் சஞ்சய்.என்.மாலி, நோண்பு இருக்கவில்லையா? என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு டிரைவர் ஜஃபாரோ, தனக்கு அதிக பணிச்சுமை காரணமாக உடற்சக்தி குறைவாக இருப்பதனால் இயங்குவதே கடினமாக இருக்கும் சூழலில் நோண்பு இருப்பது சிரமம் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சஞ்சய்.என்.மாலி, மத நல்லிணக்கத்தை முன்மொழியும் வகையில், இதை ஒரு வாய்ப்பாகக் கருதி, தனது டிரைவருக்கு பதில், தான் நோண்பிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி பேசும் சஞ்சய். என்.மாலி, எல்லா மதமும் ஒரே தத்துவத்தையும், நற்பண்புகளையும் போதிப்பதால், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இவ்வாறு நோண்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நோண்பு காலத்தில், காலையில் 4 மணிக்கு எழுந்து உணவுண்டு விட்டு நோண்பைத் தொடங்கிவிட்டு, மாலை 7 மணிக்கு நோண்பை முடித்துக்கொள்வதால், உடல் சுத்தமாகி, மறுசீரியக்கம் பெறுவதை உணர முடிவதாகக் கூறுகிறார்.

RAMADAN, HUMANITY, ISLAM, HINDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்