VIDEO: 'என்னோட விமான டிக்கெட்டுக்காக... என் அப்பா ஒரு வருஷம் வேலை செய்தார்!'.. கண் கலங்க வைக்கும் சுந்தர் பிச்சையின் நெகிழ்ச்சி பதிவு!
முகப்பு > செய்திகள் > கதைகள்உலகின் பல சாதனையாளர்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கொண்டு சேர்க்கும் முயற்சியில் யூடியூப் இறங்கியுள்ளது. இதற்காக "Dear Class of 2020" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை யூடியூப் நடத்துகிறது. இதன் மூலம் பல சாதனையாளர்கள் தங்களது வெற்றிக்கதைகளை யூடியூபில் பேசி வருகின்றனர். அந்த வகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் பேசினார். அதில் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விஷயங்களை குறிப்பிட்டார்.
அவர் பேசும்போது, தான் முதன் முதலாக அமெரிக்கா வந்தது தொடர்பாக விவரித்தார். '27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார். அமெரிக்கா மிகுந்த செலவு மிகுந்த நாடு. நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டுமென்றால் 2 டாலர்களுக்கு மேல் செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்' எனத் தெரிவித்துள்ளார்
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து, பின்னர் சென்னை ஐஐடியில் பயின்றவர். கடந்த 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இவர் பெரும் பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார்.
2017ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பெபட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து, தற்போது அதற்கும் சி.இ.ஓ-வாக வளர்ந்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இத மட்டும் 'வால்பேப்பரா' வச்சுராதீங்க சாமி! ஸ்மார்ட் போன்களை 'காவு' வாங்கும் அழகிய புகைப்படம்... கதறும் பயனாளர்கள்... 'காரணம்' என்ன?
- அமெரிக்காவில் ‘இனவெறிக்கு’ எதிராக வலுக்கும் போராட்டம்.. கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!
- இந்திய மதிப்பில் சுமார் '75 ஆயிரம்' ரூபாய்... பிரபல நிறுவனத்தின் தரமான 'சர்ப்ரைஸ்'... இனிமே 'Work From home' ஹேப்பி அண்ணாச்சி!
- “கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி!”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்?
- 'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!
- 'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!
- இனி 'நிரந்தரமாக' வீட்டிலிருந்தே வேலை... 'அலுவலகமே' தேவையில்லை... அதிரடியாக 'பிரபல' நிறுவனம் வெளியிட்டுள்ள 'அசத்தல்' அறிவிப்பு!...
- விருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...
- நமக்கு 'சோறுதான்' முக்கியம்... ஊரடங்கு நேரத்துலயும் மக்கள் 'கூகுள்ல'... விழுந்து,விழுந்து தேடுனது 'இந்த' உணவைத்தானாம்!
- 'இன்டர்நெட்டில் அதிகம் தேடிய வார்த்தை'... 'மீண்டும் சென்னை முதலிடமா'?... 'லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்'... ஷாக்கிங் ரிப்போர்ட்!