ரிட்டயராகும் 'போட்டி நிறுவன’ CEOவுக்கு நன்றி சொல்லி பிரபல கார் நிறுவனம் உருவாக்கிய வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஜெர்மனியை ஹெட் குவார்ட்டர்ஸாகக் கொண்டு இயங்கும் மெர்சீடஸ் பென்ஸ் என்னும் குளோபல் வாகன உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே, வெகு ஆடம்பரத் தரமானவை. கார், பேருந்து, கோச், ட்ரக் என அனைத்து விதமான வாகன உற்பத்திகளிலும் இந்த நிறுவனம் தனது முன்னோடித் தனத்தை 1926ல் இருந்து தக்க வைத்துக்கொண்டு வருகிறது.

டெய்ம்லர் ஏஜி எனும் பேரண்ட் நிறுவனத்தில் இருநது, தொடங்கப்பட்டபோது அப்போது நிறுவனராக இருந்தவர் காரல் பென்ஸ்.  தற்போது இந்த நிறுவனம் பல ஆண்டுகளைத் தாண்டி பல பரிமாணங்களைக் கண்டுள்ளது. இங்கு முதன்மைச் செயலாளராகவும், போர்டு மேனேஜ்மெண்ட் சேர்மானாகவும் பணிபுரிந்து வந்த பொறியாளர் டயட்டர் ஸெட்சே 49 வருடங்கள் கழித்து தற்போது தன் பணியை நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனமும், புகழ்பெற்ற ஆடம்பர வாகனங்களை உற்பத்தி செய்து, சந்தையில் அசைக்க முடியாத நம்பிக்கைகளைப் பெற்றுள்ள இன்னொரு நிறுவனமான பி.எம்.டபுள்யூ நிறுவனம் டயட்டர் ஸெட்சேவின் பணி நிறைவுக்கு நெகிழும் வகையில் கவுரவ வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் இறுதியில், ‘பல ஆண்டுகாலம் எங்களுடைய இன்ஸ்பிரேஷனான போட்டியாளராக இருந்துள்ளீர்கள். அதற்கு நன்றி’ என்ற வாசகங்கள் தோன்றுகின்றன.

பி.எம்.டபுள்யூவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் இணையதளத்தில், 'ஓய்வு என்பது எதிர்காலத்தைத் தழுவி, அதற்காக கடந்த காலத்தை செலவிடுதல்தான்' என்கிற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள, இந்த வீடியோவை பலரும் பாராட்டியுள்ளனர்.  ஆரோக்கியமான இந்த போட்டி மனப்பான்மையின் மூலம் ஒட்டுமொத்த ஜெர்மன் இண்டஸ்ட்ரிகளின் தன்மையையும் இந்த வீடியோ பிரதிபலிப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

ZETSCHE, MERCEDES, BMW

மற்ற செய்திகள்