'வாத்தி கம்மிங் ஒத்தே'... சின்ன தல ரெய்னாவின் மரண மாஸ் விருது மொமண்ட்... இது நம்ம லிஸ்டுலயே இல்லையே...!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்விற்கு பலரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக சிஎஸ்கே அணியின் 'சின்ன தல' ரெய்னா பங்கேற்றுள்ளார். இந்நிலையில் விளையாட்டுத்துறையில் கோல்டன் கிலோப் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் (THE GOLDEN GLOBAL ICON OF INSPIRATION - SPORTS ) என்ற பிரிவில் Behindwoods Gold Icons விருதை கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறது Behindwoods. இந்த விருதினை தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்த அந்த தருணம் தமிழ் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்த தவறாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்