'செம்ம.. டிராஃபிக் சேவையிலும் கிரியேட்டிவிட்டியா?'... கவனிக்க வைக்கும் காவலர்.. ட்ரெண்ட் ஆகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

சண்டிகரில் காவலர் ஒருவர் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், நோ பார்க்கிங் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கவும் பாட்டு பாடி ஒழுங்குபடுத்திய வீடியோ பரவி வருகிறது.

போக்குவரத்து காவல் என்பது ஒரு சேவையாக இருப்பதால், அலுப்பு தட்டாமல் அந்த பணியைச் செய்ய, அதை விரும்பி செய்வது அவசியமாகிறது. அதற்கு அந்த வேலையை நாளும் புதுமையாக அணுகுவது கைகொடுக்கும். அப்படித்தான் சண்டிகரில், பஞ்சாப் ஏஎஸ்ஐ புபிந்தர் சிங் என்கிற காவலர் பாட்டு பாடி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியுள்ளார்.

அதற்காக அம்மாநிலத்தின் புகழ்பெற்ற பாடகரான டேலர் மெஹந்தி என்பவர் எழுதி, பாடிய புகழ்பெற்ற போலோ என்கிற பாடலை ரீமேக் செய்து, நோ பார்க்கிங் மற்றும் போக்குவரத்து விதிகளுக்கான பாடல் வரிகளை சொதமாக எழுதி பாடியிருக்கிறார் புபிந்தர் சிங். இதுபோன்ற போக்குவரத்து விழிப்புணர்வுக்காக இந்த பாடல் பயன்படுவது மகிழ்ச்சியாக இருப்பதாக இந்த வீடியோவை டேலர் மெஹந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

NO PARKING, TRAFFIC, VIDEOVIRAL, INSTAGRAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்