‘மூச்சு பேச்சின்றி’ இருந்த பச்சிளம் குழந்தை.. காவலர்கள் செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > கதைகள்
By |

பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு சுவாசம் நின்று போன நிலையில் அக்குழந்தைக்கு மீண்டும் சுவாச சிகிச்சை செய்து குழந்தையை போலீசார் காப்பாற்றியுள்ள சம்பவம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய பாராட்டினை போலீஸார் பெற்று வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தாய் தகப்பனான ஒரு தம்பதி தங்களுடைய குழந்தைக்கு சுவாசம் நின்று போனதாக கூறி அங்குள்ள சா பாவ்லோ நகரின் காவல் நிலையத்துக்கு வருகை தந்து போலீசாரிடம் தன் குழந்தையை காப்பாற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர்.

குழந்தையின் சுவாசம் திடீரென நின்று போனதால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீசாரிடம் அழைத்து வந்துள்ள தம்பதியரைக் கண்டு போலீசார் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் அவர்களுக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் போலீசாரிடம் வந்திருப்பதாக போலீசார் கண்டு கொண்டனர் .

ஆனால் சூழ்நிலையை புரிந்து கொண்ட போலீசார், முதலில் குழந்தைக்கு முதல் சிகிச்சை அல்லது முதல் உதவியை செய்ய முனைந்தனர். அதாவது குழந்தையை வாங்கிக் கொண்டு அங்கிருந்த இரண்டு காவலர்கள் குழந்தைக்கு முதலுதவி செய்ததும்,  குழந்தை உடனடியாக சுவாசிக்க தொடங்கியது. இதனால் பெற்றோர்களும் ஆச்சரியமடைந்ததோடு, சற்று நிம்மதியாகினர்.

எனினும் போலீசார் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து போலீசாரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

HEARTMELTING, BABY, POLICE, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்